Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மர்மம்.. மாடியிலிருந்து விழுந்து பெண் மேனஜர் தற்கொலை.. மறுவாரமே சுஷாந்த்சிங் தற்கொலை.. என்ன நடந்தது?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    பெண் மேனஜர் தற்கொலை... அடுத்த வாரமே Sushant Singh தற்கொலை.. என்ன நடந்தது?

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் பல்வேறு படங்களில் நடித்தவர். கை போச்சே என்னும் இந்தி படத்தில் அறிமுகம் ஆனவர் வடஇந்தியாவில் மட்டுமின்றி தென்னிந்தியாவில் பிரபலம்.

    இவர் நடித்து தோனியின் வாழக்கை வரலாற்று படமான ms dhoni the untold story படம் நாடு முழுக்க ஹிட் அடித்தது. இந்த படம் மூலம் இவர் தமிழகத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தார்.

    பாலிவுட்டில் அடுத்த ஷாக்.. எம்.எஸ். தோனி பயோபிக் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

    தற்கொலை

    தற்கொலை

    இந்த நிலையில் சுஷாந்த்சிங் இன்று அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மும்பையில் இருக்கும் அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். நேற்று கூட அவர் தனது நண்பர்களை வீட்டில் வைத்து பார்த்து இருக்கிறார். சந்தோசமாக இருந்துள்ளார். ஆனால் இன்று தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.

    தூக்கு மாட்டி இறந்தார்

    தூக்கு மாட்டி இறந்தார்

    இன்று அவரின் நண்பர் ஒருவர் அவரை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டு கதவை திறக்கவில்லை. அதோடு நண்பர் செய்த போனையும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டு கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போதுதான் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.

    எப்படி இறந்தார்

    எப்படி இறந்தார்

    இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தற்கொலைக்கு மன அழுத்தம் காரணம் என்று கூறுகிறார்கள். இவர் மன அழுத்தத்திற்கு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார். இந்த நிலையில் இவரின் முன்னாள் மேனேஜர் சில நாட்களுக்கு முன் இதே போல் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் மேனேஜர்

    முன்னாள் மேனேஜர்

    சுஷாந்த்சிங்கிங் முன்னாள் பெண் மேனேஜர் கடந்த ஜூன் 8ம் தேதி இதேபோல் தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயர் திஷா சலியான். மும்பையில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இது தொடர்பாக நிறைய மர்மங்கள் நிலவி வருகிறது.

    என்ன மர்மம்

    என்ன மர்மம்

    இந்த நிலையில் தற்போது சரியாக சுஷாந்த்சிங் மரணம் அடைந்து உள்ளார். இவரின் மரணத்திற்கு உண்மையில் மன அழுத்தம்தான் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். பாலிவுட் உலகை இந்த மரணம் உலுக்கி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+