Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியில் பேச முடியாது.. புரிய வேண்டியவர்களுக்கு புரியட்டும்.." மும்பையில் திட்டவட்டமாக சொன்ன கஜோல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கஜோல் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மராத்தியில் பேசிய அவரிடம், அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் இந்தியில் பேசுமாறு கூறியிருக்கிறார். அதைக் கேட்ட டென்ஷனான கஜோல் இந்தியில் பேச முடியாது என்று காட்டமாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாட்டில் எப்போதும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக ஒரு குரல் இருந்து கொண்டே இருக்கும். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் இந்தி திணிப்பிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். இந்தி திணிக்கப்படும்போது தமிழ் மொழிக்கு ஆபத்து இருக்கிறது என்பதே அவர்களின் பிரதான வாதமாகும். வட இந்தியாவில் அப்படிப் பல மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பு காரணமாகப் பல மொழிகள் அழிந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

Kajol Refuses to Speak in Hindi Snaps at Reporter Amid Language row in Maharashtra

மராத்தி விவகாரம்

அப்படி இந்தி மொழியால் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்ட மொழிகளில் ஒன்று மராத்தி. மகாராஷ்டிரா என்றால் பலரும் இந்தி அங்குத் தாய் மொழி என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், உண்மையில் மகாராஷ்டிராவின் மொழி மராத்தி. இருப்பினும், இந்தியின் ஆதிக்கம் காரணமாக மராத்தி மொழி மெல்ல அழிந்து வருவதாக மராத்தி ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மொழி விவகாரம் அங்குப் பெரிதாக வெடிக்கும் நிலையில், சமீபத்தில் கூட இது தொடர்பாக அங்குள்ள ராஜ் தாக்கரே போராட்டங்களை அறிவித்திருந்தார்.

கஜோல் திட்டவட்டம்

இதற்கிடையே மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை கஜோல் இந்தியில் பேச மறுத்துள்ளார். மும்பையில் மகாராஷ்டிர மாநில விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை கஜோல் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் கஜோல் மராத்தியில் பேசியிருக்கிறார். அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் கஜோலிடம் இந்தியில் பேசுமாறு கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டவுடன் கஜோல் எரிச்சலடைந்து உள்ளார். உடே கஜோல் காட்டமாக, "இப்போது இந்தியில் பேச வேண்டுமா? புரிந்து கொள்ள விரும்புபவர்கள் புரிந்து கொள்வார்கள்!" என்று மட்டும் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

நெட்டிசன்கள் சொல்வது என்ன

ஒரு சிலர் கஜோலுக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்லியுள்ளனர். மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசக்கூடாது என்றால் வேறு எங்குப் பேச முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரம் நெட்டிசன்கள் பலர் கஜோலுக்கு எதிராகக் கருத்துச் சொல்லி வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "இந்தி மொழியில் பேசச் சங்கடமாகவும், வெட்கமாகவும் இருந்தால், அவர் பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும். இரட்டை வேடத்தைக் கைவிட வேண்டும்" என்று சாடியிருக்கிறார். மற்றொரு நபர், "இந்தியை மதிக்காமல் வெறுத்தால், அவர் மராத்தி படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

ஏன் முக்கியம்

மகாராஷ்டிராவில் மொழி விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் கஜோலின் இந்தக் கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. சமீபத்தில் அங்கு மகாராஷ்டிரா அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மூன்றாவது மொழியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் கடும் எதிர்ப்பால் இந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, மும்பை மற்றும் புனேவில் மராத்தியில் பேச மறுத்தவர்களுடன் ராஜ் தாக்கரே கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பல சம்பவங்கள் நடந்தன.

முன்னதாக, நடிகை ரேணுகா ஷஹானேவும் இது குறித்து, "நீங்கள் ஒரு இடத்திற்கு வந்து நீண்ட காலம் இருக்கிறீர்கள் என்றால்.. அந்த உள்ளூர் மொழி, உள்ளூர் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள அவசியம் இல்லை என்று நினைப்போரை எனக்குப் பிடிக்காது" என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+