சோனு சூட் மோசடிக்காரர்.. வந்த ட்வீட்டை லைக் போட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் கங்கனா ரனாவத்
மும்பை: கொரோனா காலத்தை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்தும் நடிகர் சோனு சூட் ஒரு மோசடிக்காரர் என ஒரு நெட்டிசன் பதிவிட்ட ட்வீட்டிற்கு நடிகை கங்கனா ரனாவத் லைக் செய்துள்ளார்.
Recommended Video
ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் இந்தியா முழுவதும் மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாட்டு நிலவுகிறது.
இந்த நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் செறிவூட்டியை சோனு சூட் விளம்பரம் செய்வதாக ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

சோனு சூட்
இந்த புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்தார். இதில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை ரூ 2 லட்சம் மட்டுமே என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை கடுமையாக விமர்சனம் செய்த நெட்டிசன் ஒருவர் சோனு சூட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பணம் சம்பாதிக்கும் மோசடிக்காரர்
கொரோனா காலத்தை நடிகர் சோனுசூட் பணம் சம்பாதிக்கும் மோசடிக்காரர் என திட்டியுள்ளார். மேலும் அந்த ட்வீட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கும் டேக் செய்திருந்தார். சோனு சூட்டை விமர்சிக்கும் அந்த டவீட்டிற்கு கங்கனா லைக் போட்டுள்ளார். இந்த ட்வீட்டை 2700 பேர் லைக் போட்டுள்ளனர். 800 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

என்ன சொல்கிறார் கங்கனா
இதனால் சோனு சூட் மோசடிக்காரர் என நெட்டிசன் போட்டதை கங்கனா ஆமோதிக்கிறாரா என சமூகவலைதளங்களில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டே அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் தெர்மாமீட்டர் பிராண்டுகளை விளம்பரப்படுத்த சோனு சூட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

கங்கனா
மேலும் இது பழைய புகைப்படம் என கூறப்பட்டுள்ளது. இதை எடுத்து போட்டு சிலர் சூழலுக்கு ஏற்ப பரப்பி வரும் நிலையில் உண்மை தெரியாமல் பலருக்கு உதவிகளை செய்யும் சோனு சூட் மீது இப்படி சேற்றை வாரி இரைக்கலாமா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் பிரச்சினையின்போதும் இப்படித்தான் போராடிய விவசாயிகளை கடுமையாக கங்கனா விமர்சித்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications