ஏசி வேலை செய்யவில்லை.. ரொம்ப வியர்க்குது.. என்னால் முடியல.. பாடகர் கே.கே.வின் கடைசி வீடியோ
மும்பை: எனக்கு மிகவும் வியர்க்கிறது என்னால் முடியவில்லை என பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கூறியதாக கடைசி வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் இதுவரை 3500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்களை பாடிவருகிறார். தனது காதல் பாட்டால் 90 கிட்ஸை கிறங்கடித்தவர்.
தமிழ் திரைப்படங்களில் இவர் 66 பாடல்களை பாடியுள்ளார். மின்சார கனவு படத்தில் வரும் ஸ்டாபெர்ரி கண்ணே பாடல் மிகவும் பிரபலம். அது போல் அன்னியன் படத்தில் வரும் அண்டங்காக்கா கொண்டைகாரி பாடலும் ரசிகர்களை கவர்ந்தது.

கொல்கத்தா
இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் குன்னத் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மறைவுக்கு காரணம்
அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவால் திரையுலகமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. அவரது நினைவுகளை இசையமைப்பாளர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

கடைசி வீடியோ
இந்த நிலையில் கேகே பங்கேற்ற நிகழ்ச்சியின் கடைசி வீடியோவை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவில் அவருக்கு அதிகமாக வியர்வை ஏற்படும் காட்சிகள் உள்ளன. அவர் அவ்வப்போது டவலை கொண்டு துடைத்து வருகிறார். அத்துடன் ஏசி ஏன் ஓடவில்லை என்று கேள்வி எழுப்பும் காட்சியும் பதிவாகியுள்ளது.

மர்மம்
மேலும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி திறந்த வெளி ஆடிட்டோரியமும் இல்லை. கூட்டம் வேற நிறைய இருந்ததால் அவருக்கு காற்றோட்டம் இல்லாமல் இருந்தது. அவருடைய இறப்பில் மர்மம் உள்ளதாக தெரிகிறது. உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்ற பின்னர் முழு விவரம் தெரியவரும். பாலிவுட் பாடகர்கள் மற்றும் ரசிகர்களும் தங்களுடைய அஞ்சலியை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications