பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் சோகம்!
மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. தர்மேந்திராவின் மறைவு, ரசிகர்கள், குடும்பத்தினர், பாலிவுட் திரையுலகினர் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா, கடந்த மாதம் உடல் நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக செய்திகள் வெளியானது. பின்னர் அவரது குடும்பத்தினர் அது வெறும் வதந்தி எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார் தர்மேந்திரா. இந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 89.
கடந்த 1935 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தவர் தர்மேந்திரா. இவர் தனது 19 வது வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள். சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா தியோல், மற்றும் அஜிதா தியோல். 1980ல் நடிகை ஹேமாமாலினியை திருமணம் செய்துகொண்டார். ஹேமாமாலினி மூலம் அவருக்கு 2 குழந்தைகள் பிறந்தன.
1960-ம் ஆண்டு வெளியான 'தில் பி தேரா ஹம் பி தேரே' என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தர்மேந்திரா. இவர் நடிப்பில் வெளியான 'ஷோலே' படம் பெரிய அளவில் ஹிட்டடித்ததால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார் தர்மேந்திரா.
சுமார் 60 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் வலம் வந்தவர் தர்மேந்திரா. அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'Ikkis' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மகள் ஈஷா தியோல் ஆகியோர் திரை உலகில் பிரபலமாக இருக்கின்றனர்.
தர்மேந்திராவின் இறுதிச் சடங்கு வில்லே பார்லேயில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது. தர்மேந்திராவின் மூத்த மகன் சன்னி தியோல் அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்கிறார். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் பலரும் தர்மேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
அடுத்த வாரம், டிசம்பர் 8 ஆம் தேதி தனது 90வது பிறந்தநாளை கொண்டாட இருந்த தர்மேந்திரா அதற்குள் இயற்கை எய்தியிருப்பது அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைத்துறை கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications