அதோ.. திலீப் வீட்டு ஹாலில் ஒய்யாரமா படுத்துக் கொண்டிருப்பது யார்னு பார்த்தீங்களா?
விவசாயி வீட்டில் பதுங்கிய சிறுத்தையின் சிசிடிவி காட்சி வைரலாகிறது
மும்பை: திலீப் வீட்டு ஹாலில் ஒய்யாரமாக படுத்து கொண்டிருப்பது யார் தெரியுதா? இப்போது இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டம் பிம்பல்கன் ரோடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் திலீப். இவர் ஒரு விவசாயி.. ஒரு நாயை வளர்த்து வருகிறார்.

போன சனிக்கிழமை அந்த நாய் தெருவில் எங்கேயோ போய் கொண்டிருந்தது. அதனை ஒரு சிறுத்தை பார்த்துவிட்டு, பின்னாடியே துரத்த ஆரம்பித்தது. இதனால், அந்த நாயை துரத்தி கொண்டு சிறுத்தை ஓடிவந்தது. நாயோ, திலீப் வீட்டுக்குள் ஓடிவந்து பதுங்கி கொண்டது.
துரத்தி வந்த சிறுத்தையும் திலீப் வீட்டுக்குள் வந்துவிட்டது.. சிறுத்தையை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.
திலீப்பின் நாய், வீட்டின் கதவு பின்னாடி நுழைந்து திரும்பவும் வேறு பக்கமாக வெளியே போய்விட்டது.ஆனால் விரட்டிக் கொண்டு வந்த சிறுத்தைக்கோ வழி தெரியவில்லை.. சுற்றிலும் சேர், சோபாக்கள் இருக்கவும், ஹாலிலேயே படுத்து கொண்டது. இதையடுத்து திலீப் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கவும், அவர்கள் விரைந்து வந்தனர்.
கிட்டத்தட்ட 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். அந்த சிறுத்தைக்கு 4 வயசு ஆகிறதாம்.. இப்போது காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு போய் விட்டுள்ளனர். திலீப் வீட்டு ஹாலில் தங்கிய சிறுத்தையின் வீடியோதான் வைரலாகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications