ஊழியரை கடத்தி.. அடைத்து வைத்து... ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்த ஓனர்.. ஷாக் தரும் மும்பை!
ஊழியரை கடத்தி, ஆணுறுப்பில் கிருமிநாசினி தெளித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
மும்பை: பண விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவில், 30 வயது ஊழியரை, அவரது கம்பெனி ஓனரே.. கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைத்ததுடன், அந்த ஊழியரின் ஆணுறுப்பில் சானிடைசரை தெளித்து சித்ரவதையும் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுவதாவது: "கடந்த ஜுன் 13, 14 ஆகிய தேதிகளில் நிறுவனத்தின் ஆபீசிலேயே இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.. இந்த புகார் குறித்த கடந்த 2ம்தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர்களின் ஓவியங்களின் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனம் கோத்ரூட்டில் செயல்பட்டு வருகிறது.. அங்கு மேனேஜராக வேலை பார்த்தவர்தான் 30 வயது இளைஞர். கடந்த மார்ச் மாதம் பணிநிமித்தமாக மேனேஜர் டெல்லிக்கு சென்றிருக்கிறார்.. ஆனால் லாக்டவுன் போடப்படவும், அங்கு சிக்கிக்கொண்டார். இதனால் டெல்லியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வேண்டிய சூழல் மேனேஜருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மே 7-ம் தேதி புனேவுக்கு திரும்பி வந்துள்ளார்.. வெளியூரில் இருந்து வந்ததால், 17 நாட்களுக்கு ஒரு ஹோட்டலில் அவரை தனிமையில் இருக்கும்படி அவரது கம்பெனி ஓனர் சொல்லியிருக்கிறார்.. மேனேஜர் கையில் காசு இல்லாததால் மேனேஜர் தன்னுடைய செல்போன், டெபிட்கார்டை அடமானம் வைத்துள்ளார்.
இதனிடையே, கடந்த 13-ம் தேதி, கம்பெனி ஓனரும், அவரது பிஏவும் செலவழித்த பணம் எங்கே என்று கேட்டு மேனேஜரை கடத்தியுள்ளனர்.. ஒரு மூட்டையில் ஊழியரை கட்டி, காரில் போட்டுக் கொண்டுபோய், ஒரு இடத்தில் அடைத்து வைத்து தாக்கி உள்ளனர்.. மேலும் ஊழியரின் ஆணுறுப்பில் சானிடைசரையும் தெளித்து சித்ரதை செய்துள்ளனர். இப்போது பாதிக்கப்பட்டவரை மீட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது... ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை" என்று கூறினர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications