"உறவுகள் போலி".. லட்டர் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய நடிகை.. மும்பையை உலுக்கும் இன்னொரு தற்கொலை
மும்பையில் டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மும்பை: "உறவுகள் போலி.. கனவுகளின் இறப்பு தான் கொடூரமானது" என்று கடிதம் எழுதிவிட்டு நடிகை ஒருவர் தூக்கு போட்டு தறகொலை செய்து கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ப்ரெஷா மேத்தா.. வயது 25 ஆகிறது.. இவர் ஒரு சீரியல் நடிகை.. கிரைம் பாட்ரோல், மேரி துர்கா, லால் இஷ்க் ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளவர்.. இதற்காக மும்பையிலேயே தங்கி உள்ளார்.
இந்த சமயத்தில் லாக்டவுன் போட்டுவிடவும், அனைத்து ஷூட்டிங்கும் இந்தியா முழுக்க கேன்சல் ஆகிவிட்டது.. இதனால் மும்பை வீட்டில் இருக்க முடியாமல் சொந்த ஊரான இந்தூருக்கு மேத்தா சென்றார். அங்கு சென்றதில் இருந்தே ஒருவித மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.

மன உளைச்சல்
ஷூட்டிங் எப்போன்னு தெரியலயே என்று புலம்பியும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் மன உளைச்சல் அதிகமாகி தன்னுடைய ரூமிலேயே ஃபேனில் தூக்கு போட்டு கொண்டார். மறுநாள்தான் அவர் தூக்கில் தொங்கியது கவனிக்கப்பட்டு, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால், மேத்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.

விசாரணை
இந்த சம்பவம் குறித்து ஹிராநகர் போலீசார் விசாரணையும் நடத்திவருகிறார்கள்.. அப்போது மேத்தா தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.. அதில் முழுக்க முழுக்க தன்னுடைய எதிர்காலத்தை பற்றி புலம்பியுள்ளார்.. உறவுமுறைகள் குறித்தும் ஏமாற்றத்துடன் சில வரிகளை எழுதி உள்ளார்.

கனவுகளின் இறப்பு
தற்கொலைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புகூட இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், "கனவுகளின் இறப்பு தான் கொடூரமானது" என்று தெரிவித்துள்ளார்.. இந்த பதிவுகள் எல்லாமே அவரது மன அழுத்ததை வெளிப்படுத்தி உள்ளது.. இதையெல்லாம் பார்த்து சக கலைஞர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.

அதிர்ச்சி
ஏற்கனவே இப்படித்தான், கடந்த 15ம் தேதி டிவி நடிகர் மன்மீத் க்ரேவால் தூக்கு போட்டு கொண்டார்.. அவரால் வீட்டு வாடகையை கூட தர முடியாமல் இருந்திருக்கிறார்.. மன அழுத்தத்தினால்தான் அவரும் தற்கொலை செய்து கொண்டார். இப்படி லாக்டவுனால் ஷூட்டிங் இல்லாததாலும், வருமானம் இல்லாததாலும் அடுத்தடுத்து நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து வருவது கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications