பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சேது பாலம்: ரூ.250 டூ 1,600! வாகனங்களுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
மும்பை: மும்பையில் நாட்டிலேயே மிக நீண்ட கடல் பாலம் கட்டி இன்று திறக்கப்பட்டுள்ளது. அடல் சேது பாலம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலத்தில் வாகனங்கள் பயன்படுத்த செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி பார்ப்போம்.
இந்தியாவின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டிலேயே மிக நீளமான கடல் வழி பாலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். சுமார் 22 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம், இந்தியாவின் மீக நீண்ட பாலமாகவும், நீண்ட கடல் பாலமாகவும் இருக்கிறது.

இந்த பாலத்தின் மூலம் மும்பையிலிருந்து நவி மும்பைக்கு செல்லும் நேரம் 2 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைகிறது. மேலும், மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இது இணைக்கிறது. இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
40 கி.மீட்டர் வேகத்தில் தான்: ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இன்று பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் 40 கி.மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும். இந்த பாலத்தை வாகனங்கள் பயன்படுத்துவதற்கான கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.
மாதாந்திர பாஸ்: அதன்படி, கார்கள் ஒருமுறை பயணிக்க ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். ரிட்டர்ன் பயணத்திற்கும் சேர்த்து என்றால் ரூ. 375 கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி பாஸ் என்றால் ரூ.625 செலுத்த வேண்டும். மாதந்திர பாஸ் தேவைப்பாட்டால் ரூ.12,500 கட்டணமாக செலுத்த வேண்டும். மினி பஸ்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.400, ரிட்டன் பயணத்திற்கு ரூ.600 வசூல் செய்யப்படும்.
இதேபோல் தினசரி பாஸ் என்றால் 1000, மாதாந்திர பாஸ் என்றால் 20,000 - செலுத்த வேண்டும். பேருந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.830 செலுத்த வேண்டும். மாதந்திர பாஸ் என்றால் ரூ.41,500 கட்டணமாக செலுத்த வேண்டும். கனர கலாரிகள் 3 அச்சுக்கள் கொண்ட வாகனத்திற்கு ஒருமுறை பயணிக்க 905 -ம் 4-6 அச்சுக்கள் கொண்ட டிரக்குகள் என்றால் 1,300 செலுத்த வேண்டும்.
அதிக சுமை ஏற்றி செல்லும் டிரெய்லர் லாரிகளுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.1,580ம், தினசரி பாஸ் என்றால் ரூ.3,950; மாதாந்திர பாஸ் என்றால் ரூ.79,000-ம் செலுத்த வேண்டும். இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications