அவ்ளோதானா? பெட்டி, படுக்கையோடு குடும்பத்துடன் முதலமைச்சர் மாளிகையிலிருந்து புறப்பட்ட உத்தவ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முதலமைச்சருக்கான இல்லத்திருந்து பெட்டியுடன் கிளம்பினார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
Recommended Video

பாஜகவின் திட்டம்
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

குதிரைபேரம்
இதனால் சிவசேனா கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி மனநிலை எழத் தொடங்கியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த பாஜக தனது வழமையான குதிரை பேர முறையை கையில் எடுத்து இருக்கிறது. நேற்று பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டு உள்ளதாகவும் அவர்களில் 5 பேர் அமைச்சர்கள் என்றும் ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ என்றும் தகவல் வெளியானது.

33 எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில், சிவசேனா தலைவர் மிலிந்த் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னுடன் 35 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குஜராத் ஓட்டலில் உள்ள 33 எம்.எல்.ஏக்களின் பெயர் பட்டியலும் வெளியானது. இதனை தொடர்ந்து இன்று சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆளுநருக்கு கடிதம்
இந்த நிலையில் இன்று பேஸ்புக் லைவில் தொண்டர்களுக்கு உரையாற்றிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன்." என்று கூறினார். இந்த நிலையில் அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 34 பேர் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.

முதல்வர் இல்லத்திலிருந்து புறப்பட்ட உத்தவ்
இந்த நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான வெர்சா இல்லத்திலிருந்து பெட்டியுடன் தனது சொந்த வீட்டுக்கு புறப்பட்டார். அவருக்கு பின்னால் மற்றொரு காரில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, மனைவி ராஷ்மி, சகோதரர் தேஜஸ் தாக்கரே ஆகியோரும் சொந்த வீட்டுக்கு புறப்பட்டனர்.












Click it and Unblock the Notifications