சேனாவிற்கு 16, என்சிபிக்கு 15, காங்கிரசுக்கு 12.. மகா.வில் புது கூட்டணி பார்முலா.. விரைவில் ஆட்சி!
மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. பாஜக சிவசேனா இடையில் இன்னும் உடன்படிக்கை எட்டப்படவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் சிவசேனாவுடன் சேராமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் அங்கு நிகழ்ந்து வந்த அரசியல் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை. மகாராஷ்டிராவில் யார்தான் ஆட்சி அமைப்பார்கள், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

இறுதி கட்டம்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையிலான கூட்டணி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்று தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது. இதில் முக்கியமான உடன்படிக்கை எட்டப்படும் என்று முடிவாகி உள்ளது.

நாளை என்ன
அதன்பின் நாளை சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் மூன்று கட்சிகளும் ஆலோசனை நடத்த உள்ளது. நாளை மாலை மூன்று கட்சிகளும் சேர்ந்த முடிவு எடுத்த பின் அறிவிப்பு வெளியிடும். இதில் சிவசேனா கட்சிக்கு அதிகமாக 16 அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு இடங்கள்
அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 12 அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும். மூன்று கட்சிகளும் இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. நாளை இதை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்.

சிவசேனா எப்படி
மேலும் சிவசேனா கட்சிக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி அளிக்கப்படும். அதேபோல் சிவசேனா கட்சிக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி அளிக்கப்படும். ஆனால் யாருக்கு முதலில் முதல்வர் பதவி கிடைக்கும் என்று முடிவாகவில்லை.

துணை முதல்வர்
மேலும் காங்கிரஸ் கட்சி ஐந்து வருடமும் துணை முதல்வர் பதவியில் இருக்கும். அல்லது இரண்டரை வருடம் மட்டும் துணை முதல்வர் பதவியில் இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் ரோல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications