ட்விஸ்ட்..மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்..பாஜகவிற்கு சிக்கல்..கருத்து கணிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிதான் ஆட்சி என்று பல்வேறு கணிப்புகள் கூறிய நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று டேனிக் பாஸ்கர் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 125-140 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக மாறும் என்று டேனிக் பாஸ்கர் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே - தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூட்டணி 135-150 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மற்றவை 20-25 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மெஜாரிட்டி: மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.
எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிடுகிறது.
கணிப்பு: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 125-140 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக மாறும் என்று டேனிக் பாஸ்கர் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே - தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூட்டணி 135-150 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் வந்த மோதலில் சிவசேனாவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், மகா விகாஸ் அகாடி ஆட்சி செய்தது.
ஆனால் அதன்பின் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து ஆட்சி கவிழ்ந்தது. அதோடு தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரால் உடைந்தது. இவர்கள் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவசேனா ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications