Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு 150..மகாராஷ்டிராவில் இதுவே தனிப்பெரும்பான்மைக்கு போதுமே! உற்று பார்க்கும் எதிர்க்கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு பாஜக, சிவசேனா மற்றும் என்சிபி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு அமையும் கூட்டணி குறித்தும் அது தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.

மகாராஷ்டிராவில் இப்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக- சிவசேனா கூட்டணி அரசு நடந்து வருகிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

maharashtra assembly election 2024 assembly election 2024 maharashtra 2024

இதற்கிடையே மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக, சிவசேனா மற்றும் என்சிபி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி இப்போது பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.

பாஜகவுக்கு 140: இதில் பாஜக 140 முதல் 150 இடங்களில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 80 இடங்களிலும், அஜித் பவாரின் என்சிபி 55 இடங்களிலும் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

தனிபெரும்பான்மை: அஜித் பவார் என்சிபி-க்கு குறைவான இடங்கள் வழங்கப்படும் என்பதால், இன்னுமே கூடுதல் இடங்களில் 160 வரை கூட பாஜக போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் 288 இடங்கள் உள்ள நிலையில், அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க 145 சீட்களில் வெல்ல வேண்டும். பாஜக 150 இடங்களில் போட்டியிட்டு மிக பெரிய வெற்றியை பெற்றால் தனிப்பெரும்பான்மை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் அங்கே எதிர்க்கட்சிகள் மிக வலுவாக இருக்கிறது. அங்கு பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார்) கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்துள்ளது. அங்குக் கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் கூட அங்குள்ள 48 எம்பி தொகுதிகளில் 30 இடங்களை இந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் பாஜக கூட்டணியால் அங்கு வெறும் 17 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் வரும் சட்டசபைத் தேர்தலில் கம்பேக் தரவேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.

2019 தேர்தல்: கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் ஒருங்கிணைந்த சிவசேனா இணைந்து களமிறங்கியது. அதில் பாஜக சிவசேனா கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இருப்பினும், அதன் பிறகு முதல்வர் யார் என்பதில் பாஜக- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணி முடிவுக்கு வந்தது.

அதன் பின்னரே சிவசேனா காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தனர். இதில் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றார். சுமார் 2.5 ஆண்டுகள் இந்தக் கூட்டணியில் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் இருந்தது.

கலகம்: ஆனால், 2022ஆம் ஆண்டில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே கலகம் செய்தார். உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக எம்எல்ஏக்களை திரட்டிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். பாஜக- சிவசேனா கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றார். இதனால் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி கூட்டணி கவிழ்ந்தது. சிவசேனா இரண்டாகப் பிளவுபட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே அணி பாஜக உடனும் தாக்கரே அணி காங்கிரஸ் உடனும் இணைந்து பயணித்தது.

2023இல் கிட்டதட்ட இதை நிகழ்வுகள் தான் என்சிபி கட்சியிலும் நடந்தது. சரத் பவாருக்கு எதிராக அஜித் பவார் கலகம் செய்தார். என்சிபி கட்சியும் இரண்டாகப் பிளவுபட அஜித் பவார் பாஜக உடனும் சரத் பவார் காங்கிரஸ் உடனும் இணைந்து பயணித்தார். லோக்சபா தேர்தில், உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் தரப்பு சின்னத்தை இழந்தே போட்டியிட்டனர். இருப்பினும், ஷிண்டே தரப்பை விட தாக்ரே சிவசேனா அதிக சீட் வென்றது. அதேபோல சரத் பவார் என்சிபியும் அதிக இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் தான் என்டிஏ கூட்டணி மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+