மகாராஷ்டிரா: 'தாவூத்' கூட்டாளியான நவாப் மாலிக் வேட்பாளரா? அஜித்பவாரை மிரட்டுதே பாஜக
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கை களமிறக்கக் கூடாது என கூட்டணிக் கட்சியான பாஜக போர்க்கொடி தூக்கி உள்ளது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான நவாப் மாலிக்கை வேட்பாளராக கூட்டணி கட்சியான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரிப்பதை ஏற்கவும் முடியாது; ஆதரிக்கவும் முடியாது என்கிறது பாஜக.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ், ஷிண்டே சிவசேனா இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுத்இப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக, தமது கூட்டணிக் கட்சியான அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விவகாரங்களில் தலையிட்டு குடைச்சலைக் கொடுத்து வருகிறதாம். அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக், மான்கூர்டு-சிவாஜி நகர் தொகுதியில் போட்டியிட இருக்கிறாராம். அவரது மகன் சனா, அணுசக்தி நகர் தொகுதியில் களமிறங்கவும் உள்ளாராம்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் நவாப் மாலிக். இதனால் அமைச்சர் பதவியையும் இழந்தார். நவாப் மாலிக்கை கடந்த காலங்களில் பாஜக மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது. இதனால் தற்போதைய தேர்தலில் நவாப் மாலிக்குக்கு போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக மும்பை பாஜக தலைவர் ஆசிஸ் செலார் கூறுகையில், தாவூத் இப்ராகிமுடன் தொடர்பில் இருப்பவருக்கு எப்படி சீட் தர முடியும்? அப்படியே அஜித்பவார் அவரை வேட்பாளராக அறிவித்தாலும் பாஜகவின் நிலைப்பாடு வேறாகத்தான் இருக்கும்; நிச்சயம் நவாப் மாலிக்கை பாஜக ஆதரிக்காது; எதிர்க்கவே செய்யும் என்கிறார் திட்டவட்டமாக. பாஜகவின் இந்த நிலைப்பாட்டால் அஜித் பவார் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications