மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா தேர்தல்: சரிபாதி தொகுதி பங்கீடு நிபந்தனை- உடையக் காத்திருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி

Google Oneindia Tamil News

Recommended Video

    Shivsena warns BJP | மகாராஷ்டிரா தேர்தல் : சரிபாதி தொகுதி பங்கீடு ,சிவசேனா நிபந்தனை

    மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சரிபாதியாக தொகுதிகளை பங்கீடு செய்வதற்கு பாஜக ஒப்புக் கொள்ளாவிட்டால் கூட்டணி உடையும் என சிவசேனா தொடர்ந்து எச்சரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபைக்கான தேர்தல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    Maharashtra Assembly Elections: Shivsena warns BJP alliance may break

    ஏற்கனவே ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்து களத்தில் நிற்கின்றன. ஆளும் பாஜக- சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீடு விவகாரம் கூட்டணிக்கு பெரும் சிக்கலாக இருக்கிறது.

    மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 144 தொகுதிகளை அதாவது சரிபாதி தொகுதிகளை கேட்கிறது சிவசேனா. ஆனால் பாஜகவோ 120 இடங்களுக்கு மேல் ஒரு இடம் கூட தரமுடியாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது.

    இதனால் சிவசேனா கடும் அதிருப்தியில் இருக்கிறது. கடந்த 2014 சட்டசபை தேர்தலிலும் இதேபோல் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தன.

    சிவசேனாவைப் பொறுத்தவரை லோக்சபா தேர்தலின் போதே அமித்ஷா முன்னிலையில் இரு கட்சிகளும் சமமான எண்ணிக்கையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என உடன்பாடு எட்டப்பட்டது. இப்போது அதை பாஜக மீறக் கூடாது என்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், தேவேந்திர பட்னவிஸ், அமித்ஷா முன்னிலையில்தான் சரிபாதி இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இப்போது அதை நிராகரிப்பது ஏன்? சிவசேனாவை சேர்ந்த அமைச்சர் திவாகர் ரோட், கூட்டணி உடையும் என கூறியிருந்தார். அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை என கூறியிருக்கிறார்

    திரிசங்கு சொர்க்கத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி?

    English summary
    Sources said that If BJP not accept 50-50 seat sharing formula Shiv Sena may break the alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X