ஒரு வாரம்தான் டைம்.. இல்லையென்றால் மீண்டும் தேர்தல்.. மகா.வில் அதிரடிக்கு தயாராகும் பாஜக!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது என்று கூறுகிறார்கள்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

சந்திப்பு
இந்த நிலையில்தான் இன்று காலை பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இன்று காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடந்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா தொடர்ந்து முரண்டு பிடிப்பது குறித்து இதில் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.

பாஜக
அதன்படி மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது என்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடியாது. அதனால் இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கட்டும். 3 மாதங்களுக்கு பிறகு தேர்தலை சந்திப்போம்.

தேர்தல் எப்படி
அடுத்த முறை தேர்தலை தனியாக சந்திப்போம். இதன் மூலம் மீண்டும் ஆட்சியில் அமர முடியும். சிவசேனா உடன் நாம் கூட்டணி வைத்து இருக்க கூடாது. அதனால் தான் எல்லா பிரச்சனையும் என்று பாஜக மூத்த தலைவர்கள் கருதுவதாக தகவல்கள் வருகிறது.

இன்னும் ஒரு வாரம்
பாஜக அதிகபட்சம் இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்கும். அதற்குள் ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சிதான். அதன்பின் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் என்று கூறுகிறார்கள். பாஜகவின் இந்த முடிவு சிவசேனாவிற்கு அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications