சிவசேனா தேசியவாத காங். சேர கூடாது.. மகாராஷ்டிர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகும் பாஜக!
மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் பிரச்னைக்கு மொத்தமாக பாஜக முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் பிரச்னைக்கு மொத்தமாக பாஜக முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலைதான் பாஜகவிற்கு மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

முடிவு இல்லை
இந்த நிலையில் சிவசேனாவுடன் எவ்வளவு பேசியும் பாஜகவால் உடன்படிக்கையை எட்ட முடியவில்லை. சிவசேனாவும் கண்டிப்பாக முதல்வர் பதவி வேண்டும். இரண்டரை வருடம் எங்களுக்கும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் என்ன
அதே சமயம் தேசியவாத காங்கிரஸ் இன்னொரு பக்கம் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்க தயாராகி வருகிறது. அதன்படி சிவசேனாவிற்கு ஆதரவு அளித்து. அவர்களை ஆட்சியில் அமர வைக்கலாம். பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூரத்தில் வைக்க இதுவே சரியான வழி என்று தேசியவாத காங்கிரஸ் நினைக்கிறது .

நூல்விட்டது
இதற்காக சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ் இப்போதே நூல் விட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனைக்குள் வரவே இல்லை என்றுதான் கூற வேண்டும். நாங்கள் எதிர்கட்சியாகவே இருந்து கொள்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி மொத்தமாக ஒதுங்கிவிட்டது.

சிவசேனா எப்படி
இதனால் தற்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் சேர்வதை தடுக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் வர வாய்ப்பில்லை. அதனால் மொத்தமாக அங்கு அரசியல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சரியாக இருக்கும் என்று பாஜக நினைக்கிறது.

ஜனாதிபதி ஆட்சி
பெரும்பாலும் மகாராஷ்டிராவில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணையும் நிலை ஏற்பட்டால் ஆளுநரை வைத்து ஜனாதிபதி ஆட்சிக்கு பாஜக காய் நகர்த்தும். சிவசேனாவை ஆட்சியில் அமர பாஜக விடாது என்று கூறுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications