மகாராஷ்டிராவில் 'அடிவாங்க' காரணமே மோடி பிரசாரம்தான்.. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பாய்ச்சலால் பரபரப்பு!
மும்பை: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் பிரசாரம்தான் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்க காரணம் என அம்மாநில முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 13 இடங்களில் வென்றது; பாஜக 9, சிவசேனா உத்தவ் தாக்கரே 9, சரத்பவார் என்சிபி 8, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7, அஜித் பவார் என்சிபி 1 இடத்தில் வென்றது.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மிக அதிகமான தொகுதிகளில் வெல்வோம் என எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் நேர் மாறாக அமைந்தன. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அஜித் பவார் என்சிபி எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தி அடைந்து சரத்பவார் அணி பக்கம் தாவினர். இதேபோல ஏக்நாத் ஷிண்டே தரப்பிலும் அதிருப்தி வெடித்தது.
இதனிடையே மத்திய அமைச்சர் பதவிகள் ஒதுக்கீட்டில் என்சிபி அஜித் பவார், சிவசேனா ஏக்நாத்ஷிண்டே தரப்பினர் போதுமான பிரநிதித்துவம் கிடைக்கவில்லை என கொதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மற்றும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரமே தேர்தல் தோல்விக்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் 400-க்கும் அதிகமான இடங்களில் வெல்வோம் என பேசினர். அத்துடன் 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதுவோம் எனவும் பிரசாரம் செய்தார்.
இந்த பிரசாரத்தால் பொதுமக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிவிட்டது. அதாவது பாஜக 400க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதிவிடுவர்; இதனால் இடஒதுக்கீடு பறிபோய்விடும் என்பதுதான் அத்தகைய எண்ணம். இதனையே எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்தன. இதுதான் பாஜா கூட்டணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துளார்.
அடுத்தது என்ன நடக்குமோ?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications