முதல்வர் ஆன கையோடு அமைச்சரவை கூட்டம்.. இன்றே முக்கிய ஆலோசனை.. உத்தவ் தாக்கரே அதிரடி!
மகாராஷ்டிராவில் இன்று இரவு 8.30 மணிக்கு முதல் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று இரவு 8.30 மணிக்கு முதல் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இன்று பதவி ஏற்ற 6 அமைச்சர்கள் மற்றும் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடக்க உள்ளது.
மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். மும்பை சிவாஜி பூங்காவில் இன்று நடைபெற்ற விழாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்சிபியின் ஜெயந்த் பாட்டில், சஹான் புஜ்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலாசாகிப் தோரட், நிதின் ராவத் உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்த மகா விகாஸ் ஆகாதி கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சரவை இடங்கள் கிடைக்க உள்ளது. அதேபோல் சிவசேனா கட்சிக்கு 15 அமைச்சரவை இடங்கள் கிடைக்க உள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இதில் 15 அமைச்சர்கள் இன்று முதல் கட்டமாக பதவி ஏற்க உள்ளனர்.
இன்று முதற்கட்டமாக 6 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ள நிலையில், டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு அங்கு அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும். டிசம்பர் 3ம் தேதி அல்லது அதற்கு முன் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார் .
அதற்கு முன் சிவசேனா கூட்டணி வரும் 30ம் தேதி புதிய சபாநாயகரை நியமிக்க உள்ளது. சிவசேனா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு சட்டசபை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளது. ஆனால் யாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
இன்று பதவி ஏற்ற 6 அமைச்சர்கள் மற்றும் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடக்க உள்ளது. இன்று இரவு 8.30 மணிக்கு முதல் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. ஆட்சியில் செய்ய வேண்டிய திட்டங்கள், அறிவிப்புகளை இவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications