மேளதாளத்துடன் ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் வரவேற்பு கொடுத்த சிவசேனா.. விழாவிற்காக புத்தம் புதிய லுக்!
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ள விழாவிற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மாஸ் கெட்டப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ள விழாவிற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மாஸ் கெட்டப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்துள்ளது.
மாலை 5 மணிக்கு சிவாஜி பார்க்கில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்களாக அங்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் மேடை இதற்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு சுமார் 2000 போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாநில தலைவர்கள்
மாநில தலைவர்கள் பலர் இதற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி வைத்து இருக்கும் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
|
எல்லோருக்கும் அழைப்பு
அதேபோல் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவையும் சிவசேனா கட்சி விழாவிற்கு அழைத்துள்ளது. ஆனால் இவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் இன்று காலை மும்பை சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் மும்பை சென்றார்.

ஸ்டாலின் மும்பை
மும்பை சென்ற ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியினர் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மேளதாளத்துடன் ஸ்டாலினை சிவசேனாவினர் வரவேற்றனர். சிவசேனா - திமுக இடையில் பெரிய அளவில் உறவு எதுவும் இருந்தது கிடையாது. தற்போது பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் இரண்டு கட்சிகளும் இணைந்துள்ளது.

கண்ணாடி லுக்
அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் வித்தியாசமான கெட்டப்பில் அங்கு சென்று இருந்தார். கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்தபடி அவர் அங்கு சென்றார். தன்னுடைய அப்பாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அணிந்து இருந்தது போன்ற கண்ணாடி ஆகும் இது. இதே கண்ணாடியை லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஸ்டாலின் சமயங்களில் அணிந்து இருந்தார். தற்போது மீண்டும் அதை அணிய தொடங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications