மோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்!
பிரதமர் மோடியை எல்லோரும் எதிர்த்த போது அவருக்கு ஆதரவு அளித்து காப்பாற்றியது பால் தாக்கரேதான் என்று சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.
Recommended Video
மும்பை: பிரதமர் மோடியை எல்லோரும் எதிர்த்த போது அவருக்கு ஆதரவு அளித்து காப்பாற்றியது பால் தாக்கரேதான் என்று சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.
அங்கு பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று இரண்டாவது முறையாக அறிவித்துவிட்டது. அங்கு தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுடன் சேரவும் சிவசேனா முயன்று வருகிறது.

மீண்டும் சண்டை
இந்த நிலையில் பாஜகவை விமர்சனம் செய்து சிவசேனா கட்டுரை வெளியிட்டுள்ளது. சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சமனா பத்திரிக்கையில் பாஜகவிற்கு எதிராக கட்டுரை வெளியாகி உள்ளது . இதனால் பாஜக சிவசேனா இடையே பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது.

பாஜக கூட்டணி
சிவசேனாவின் அந்த கட்டுரையில், பாஜகதான் தேசிய ஜனநாயக கூட்டணி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. நீங்கள் அந்த கூட்டணியில் ஒரு அங்கம் அவ்வளவுதான். எங்களை கூட்டணியில் இருந்து நீக்குவது பற்றி ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியை அழைத்து பாஜக பேசவில்லை.

உங்களுக்கு பயம்
உங்களுக்கு சிவசேனா பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் பேச பயம். பாஜக நிதிஷ் குமார் உடனும், மெகபூபா முப்தி உடனும் சேரும் போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் அனுமதியே கேட்டது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜக எப்போதும் பொருட்டாக மதித்தது கிடையாது.

மோடி ஆதரவு
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் எல்லோரும் மோடியை எதிர்த்தனர். ஆனால் பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார். அதை அவர்கள் மறந்துவிட்டனர். பாஜகவினர் நன்றி கெட்டு சுற்றுகிறார்கள்.

உங்கள் அரசியல்
நீங்கள் அரசியலுக்கு வரும் முன்பே நாங்கள் அரசியல் செய்தோம். உங்களுக்கு இந்துத்துவா என்றால் என்ன என்று தெரியும் முன்பே நாங்கள் இந்துத்துவா அரசியல் செய்தோம். உங்களின் அரசியலுக்கு நாங்கள்தான் முன்னோடி என்பதை மறக்க வேண்டாம், என்று சிவசேனா கட்சி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications