அமித் ஷாவிற்குத்தான் திறமை இருக்கே.. ஆட்சியை பிடிங்க பார்க்கலாம்.. சவால் விடும் சரத் பவார்!
மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க அமித் ஷா என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க அமித் ஷா என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா என்னும் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு பாஜக பெரிய கஷ்டங்களை அனுபவித்து வருகிறது. முதல்வர் பதவி கொடுத்தால் ஆட்சிக்கு ஆதரவு தருவோம் என்று வெண்கல சொம்பு கேட்கும் வடிவேல் போல சிவசேனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
ஆனால் நீங்க கேட்டா நிலவை கூட வாங்கி கொடுப்போம், முதல்வர் பதவி மட்டும் கொடுக்க மாட்டோம் என்று பாஜகவும் கண்டிப்பாக இருக்கிறது. இதனால் தேர்தல் முடிந்து இரண்டு வாரம் ஆகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.

என்ன பேட்டி
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அளித்திருக்கும் பேட்டியில், பாஜகவிற்கு தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு மகாராஷ்டிராவில் இடம் இல்லை. அதேபோல்தான் சிவசேனாவும். அவர்களுக்கு ஆட்சியை பிடிக்க போதுமான இடங்கள் கிடையாது.

இரண்டு கட்சியும்
இரண்டு கட்சியும் மகாராஷ்டிராவில் 170 இடங்களை தனியாக பெற முடியாது. ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இவர்கள் தனிப்பெரும்பான்மை பெற முடியும். சிவசேனா என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

சேர மாட்டோம்
நாங்கள் அவர்களுடன் சேர மட்டோம் என்று முன்பே கூறிவிட்டோம். எங்களுக்கு அந்த விருப்பம் கிடையாது. அமித் ஷா பெரும்பான்மை இல்லாமலே பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருக்கிறார்.

என்ன செய்வார்
மகாராஷ்டிராவில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அவர் திறமையானவர் என்று கூறுகிறார்கள். அவர் தனது திறமையை வைத்து மகாராஷ்டிராவில் எப்படி ஆட்சியை பிடிக்கிறார் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன், என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications