பாஜக அமோகம்.. மகா. உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா - காங்கிரஸ் பின்னடைவு.. சரத் பவார் - உத்தவ் பரிதாபம்
மும்பை: மகாராஷ்டிராவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பாஜக அநேக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு அடுத்தப்படியா சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன. அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கி உள்ளதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 286 நகராட்சி கவுன்சில் மற்றும் 42 நகர பஞ்சாயத்துக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் கூட்டணியின்றி அனைத்து கட்சிகளும் போட்டியிட்டுள்ளன.

மகாராஷ்டிராவை ஆளும் பாஜக, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அதேபோல் இன்னொரு துணை முதல்வரான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சரத்பவார் அணி, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டுள்ளன.
அதேபோல் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (உத்தவ் ) அணி, அவரது சகோதரர் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் எனும் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன. மேலும் சுயேச்சைகள் மற்றும் சில சிறிய கட்சியினர் போட்டியிட்டுள்ளனர். சில இடங்களில் மட்டும் பாஜக - சிவசேனா, காங்கிரஸ் - சரத்பவார் அணி - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கூட்டணி அமைத்து உள்ளன.
பெரும்பாலான இடங்களில் கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளதால் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. சட்டசபை மற்றும் நாடாளுமன்றங்களில் கூட்டணியாக இருந்தாலும் கூட உள்ளாட்சி தேர்தலில் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்புக்கு மத்தியில் தான் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தான் முதற்கட்டமாக, கடந்த டிசம்பர் 2ம் தேதி 222 நகர கவுன்சில் மற்றும் 42 பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 67.63 சதவீத ஓட்டுகள் பதிவானது. அதன்பிறகு , 2வது கட்டமாக மீதமுள்ள நகர கவுன்சில் மற்றும் பஞ்சாயத்துக்கு தேர்தல் நடந்தது. 47.04 சதவீத ஓட்டுகள் பதிவானது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.
மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 246 நகராட்சி கவுன்சிலில் பாஜக 99 இடங்களில் முன்னிலை வகித்தது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 40 நகராட்சி கவுன்சிலில் முன்னிலையில் இருந்தது.
துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 31 இடங்களில் முன்னிலை வகித்தது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி 30 நகராட்சி கவுன்சிலில் முன்னிலை வகித்தது.சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி தலா 10 இடங்களில் முன்னிலை வகித்தது. மற்றவர்கள் 25 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
அதேபோல் 42 நகர பஞ்சாயத்துகளில் பாஜக 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 6 இடங்களிலும், சிவசேனாவின் (உத்தவ் அணி), அஜித் பாவராரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலா 3 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் யார் வெல்வார்கள்? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications