டவுட்டா இருக்கு! சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டது போலவே தெரியல.. மகாராஷ்டிர அமைச்சர் பகீர்
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கடந்த வாரம் நடந்த கத்திக்குத்து சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே சைஃப் அலி கானை பார்த்தால் அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடந்தது போலவே தெரியவில்லை என்று அம்மாநில அமைச்சர் நித்தேஷ் ரானே சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கடந்த வாரம் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீதான கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. அவரது வீட்டில் கொள்ளையன் புகுந்த நிலையில், சைஃப் அலி கான் அவரை பிடிக்க முயன்றுள்ளார்.

அப்போது கொள்ளையன் கத்தியால் குத்தியதில் சைஃப் அலி கானுக்கு முதுகு தண்டுவடத்திற்கு அருகில் உட்பட மொத்தம் 6 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டது. அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவர்களும் இதே கருத்தைத் தான் கூறியிருந்தனர்.
பாஜக அமைச்சர் சர்ச்சை:
இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த மகாராஷ்டிரா துறைமுக துறை அமைச்சர் நித்தேஷ் ரானே சில பரபர கருத்துகளைக் கூறியுள்ளார். அதாவது சைஃப் அலி கானை பார்த்தால் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட நபரை போலவே தெரியவில்லை என்றும் அவர் மீது தாக்குதல் நடந்ததா என்பதிலேயே சந்தேகம் இருப்பதாகவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது டான்ஸ் ஆடிக் கொண்டே சைஃப் அலி கான் வெளியே வந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் நடிக்கிறாரோ என்ற சந்தேகம் வந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நித்தேஷ் ரானே , "மும்பையில் வசிக்கும் வங்கதேசத்தினர் என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள். அவர்கள் சைஃப் அலிகானின் வீட்டிற்குள்ளேயே நுழைந்துவிட்டனர். முன்பு அவர்கள் சாலைகளில் நின்று கொண்டு இருந்தார்கள். இப்போது வீடுகளுக்குள்ளேயே நுழையும் துணிச்சல் அவர்களுக்கு வந்துவிட்டது. ஒருவேளை அவரை (சைஃப் அலி கான்) கூட்டிச் செல்ல அவர்கள் வந்திருக்கலாம். அது நல்லது. குப்பைகளை அகற்றப்படத் தான் வேண்டும்" என்று மிக மோசமான கருத்தைக் கூறினார்.
டான்ஸ் ஆடுகிறார்:
தொடர்ந்து பேசிய அவர், "சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது நான் பார்த்தேன். அவர் கத்தியால் குத்தப்பட்டாரா இல்லை அவர் நடிக்கிறாரா என்று சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது டான்ஸ் ஆடிக் கொண்டு வந்தார். அதையெல்லாம் பார்த்தால் கத்திக்குத்து நடந்தது போலத் தெரியவில்லை" என்றார்
மேலும், என்சிபி (சரத் பவார்) தலைவர்களான ஜிதேந்திரா அவாத் மற்றும் சுப்ரியா சுலே ஆகியோரை மறைமுகமாகக் குறிப்பிட்ட ரானே, "இவர்கள் ஷாருக்கான் அல்லது சைஃப் அலி கான் போன்ற நடிகர்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் மட்டும் ஓடி வந்து குரல் கொடுக்கிறார்கள். இந்து மதத்தைச் சேர்ந்த நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சித்திரவதை செய்யப்பட்ட போது, யாரும் எதுவும் சொல்லவில்லை. இவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த நடிகர் நடிகைகளுக்காக என்றாவது குரல் கொடுத்து நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா" என்று கேள்வி எழுப்பினார்.
அஜித் பவார் மறுப்பு:
நித்தேஷ் ரானேவின் இந்த பேச்சு அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அஜித் பவார் மேலும் கூறுகையில், "அவர் எதற்காக இப்படிச் சொன்னார் என புரியவில்லை. ஆனால், அவருக்கு ஏதாவது தெரிந்தது என்றால் உள் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
தற்போது கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவே அதிகாரப்பூர்வ தகவல். அந்த நபர் வங்கதேசத்தில் இருந்து தான் வந்துள்ளார். அவர் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகத் தகவல் கிடைத்துள்ளது. அடுத்த கட்ட விசாரணை நடத்திவருகிறார்கள்" என்றார்.
என்ன நடந்தது:
கடந்த ஜனவரி 16ம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டில் புகுந்த மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். சைஃப் அலி கான் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் தான் அந்த கொள்ளையனைப் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்தபோதுதான் சைஃப் அலி கானை கொள்ளையன் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். அருகே இருந்தவர்கள் தான் சைஃப் அலி கானை மீட்டுள்ளனர்.
இதையடுத்து அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது மொத்தம் ஆறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், அதில் இரண்டு காயங்கள் ஆழமாக இருந்ததாகவும் ஒன்று முதுகுத் தண்டிற்கு அருகே இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். முதுகுத்தண்டில் கத்தியின் ஒரு பகுதி பாய்ந்த நிலையில், அது ஆப்ரேஷன் மூலம் நீக்கப்பட்டது.
வங்கதேசத்தை சேர்ந்தவர்:
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது ஷரீபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்ற நபரைக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அவரை மும்பை போலீசார் ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்தச் சூழலில் தான் சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடந்தது போலவே தெரியவில்லை என்றும் அவர் நடிக்கிறார் என்பது போலவும் அமைச்சர் நித்தேஷ் ரானே சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications