Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எம்எல்ஏ உள்ளே இருக்கும் போதே வீட்டிற்கு தீ வைப்பு!" மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் பகீர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநில எம்எல்ஏ ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட பகீர் சம்பவம் அங்கே நடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இருக்கும் பெரும்பான்மை மராத்தா பிரிவினர் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு வேண்டி போராடி வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் தங்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் இவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 Maharashtra MLA Prakash Solanke Home Set On Fire By Maratha Quota Protesters

கடந்த 2018இல் கூட மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாகப் போராட்டம் வெடித்தது. இதில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டசபையில் இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மராத்தா இட ஒதுக்கீடு: இருப்பினும், அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால் மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமலேயே இருந்தது. இதற்கிடையே அக்டோபர் 24ஆம் தேதிக்குள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று கெடு விதித்திருந்தனர். அந்தக் கெடு முடிந்த நிலையில், மீண்டும் மராத்தா பிரிவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மேலும், சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதற்கிடையே மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் இப்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிவாரின் பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கேவின் வீட்டில் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். மனோஜ் ஜரங்கே பாட்டீலின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து இவரது கருத்துகளாக் கோபமடைந்த போராட்டக்காரர்கள் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தீ வைப்பு: சோலங்கேவின் வீட்டிற்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்கள், முதலில் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தையும் கற்களை வீசி சேதப்படுத்தினர். பிறகு திடீரென கேட்டை உடைத்துக் கொண்டு வந்த போராட்டக்காரர்கள் வீட்டு தீ வைத்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக என்சிபி எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கே கூறுகையில், "இந்தத் தாக்குதல் நடந்த போது நான் வீட்டிற்குள் தான் இருந்தேன். நல்வாய்ப்பாக இதில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், எனது சொத்து மோசமான சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாக எனக்கு மிகப் பெரிய நஷ்டம்" என்று அவர் தெரிவித்தார்.

 Maharashtra MLA Prakash Solanke Home Set On Fire By Maratha Quota Protesters

பகீர் வீடியோ: பிரகாஷ் சோலங்கேவின் வீடு ஒட்டுமொத்தமாகப் பற்றி எரிவதும், அவரது வீடு முழுக்க புகை மூட்டம் சூழ்ந்து இருக்கும் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும், உள்ளே இருந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இதற்கிடையில், இன்று உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இலங்கை மோதும் போட்டிகள் மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற உள்ளது. மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எங்கு இது உலகக் கோப்பை போட்டியிலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என அஞ்சப்படுகிறது. போட்டியில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே கருப்பு உடை அணிந்த மைதானத்திற்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+