மகாராஷ்டிராவில் இரவு நேர ஊடரங்கு அமலுக்கு வந்தது.. மீறினால் கடுமையான அபராதம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மகாராஷ்டிரா அரசு இன்று முதல் ஏப்ரல் 15 வரை இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது, ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மகாராஷ்டிரா அரசு இன்று முதல் தனது 'Mission Begin again' வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களு நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மகாராஷ்டிராவில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமானவற்றை இப்போது பார்பபோம்.

maharashtra night Curfew : From 8 PM-7 AM , Heavy Fines For Violators

முககவசம் கட்டாயம். பொது இடங்களில், பணியிடத்தில் மற்றும் பயணத்தின் போது முககவசம் கட்டாயமாகும்.

பொது இடங்களில் சமூக விலகல்: மக்கள் குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை பொது இடத்தில் பராமரிக்க வேண்டும்.

சினிமா அரங்குகள், மால்கள், ஆடிட்டோரியங்கள், உணவகங்கள் இரவு 8 மணிக்கு காலை 7 மணி வரை மூடப்படும். இருப்பினும், ஹோம் டெலிவரிஅனுமதிக்கப்படும்.

சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும், காலை 8மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஊரடங்கை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.: இரவு ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி வெளியில் வந்தால் ரூ .1,000 அபராதம். முககவசம் அணியாதவர்களுக்கு ரூ .500 அபராதம் விதிக்கப்படும.

maharashtra night Curfew : From 8 PM-7 AM , Heavy Fines For Violators

பொது இடங்களில் துப்பினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் மதுபானம், பான், குட்கா, புகையிலை பயன்படுத்த அனுமதி இல்லை

வீட்டிலிருந்து வேலை: நிறுவனங்களில் பணியோற்றுவரை வீட்டிலிருந்து வேலை செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது

சோதனை மற்றும் சுகாதாரம்: மக்கள் வந்து செல்லும் பொதுவான பகுதிகளில் வெப்ப பரிசோதனை, கை கழுவுதல் மற்றும் சானிசைர்கள் வைக்க வேண்டும்.

அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% திறனில் செயல்பட வேண்டும்.

மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளன

மாநிலத்தில் சமூக, கலாச்சார, அரசியல், மத கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது. இவ்வாறு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+