நேர்ல வந்து விளக்கம் சொல்லுங்க! நபிகள் நாயகம் குறித்து அவதூறு! பாஜக நுபுர் சர்மாவுக்கு பறந்த சம்மன்!
மும்பை: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக பாஜாகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மாவை விசாரணைக்கு ஆஜராகும் படி மகாராஷ்டிர காவல்துரையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகத்தைப் பற்றிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய கருத்துக்கள் காரணமாக இந்தியா மட்டுமல்லாது, கத்தார், குவைத் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.
உலக அளவில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் பதவியிலிருந்து நுபுர் ஷர்மா ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைமையால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடும் சர்ச்சை
அவரது கருத்துகள் காரணமாக கடும் கண்டனம் எழுந்த நிலையில், அவரது கருத்தால் ஏற்பட்ட கோபத்தைத் தணிக்கும் முயற்சியில் பாஜக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் "எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் கடுமையாக எதிரானது" மற்றும் "அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிக்காது" என்று கூறியது.

நுபுர் ஷர்மா பாஜக
இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, நுபுர் ஷர்மா மீது பைடோனி காவல் நிலையத்தில் ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை என்று மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே நேற்று தெரிவித்திருந்தார், இந்நிலையில் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்று கூறி முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக ஷர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

நபிகள் நாயகம் சர்ச்சை
இந்நிலையில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக பாஜாகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மாவை விசாரணைக்கு ஆஜராகும் படி மகாராஷ்டிர காவல்துரையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜூன் 22 ஆம் தேதி தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் நுபுர் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

ஆஜராக சம்மன்
இதேபோல் நூபுர் ஷர்மாவுக்கு எதிராக நகரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மும்பை காவல்துறையும் அவரை அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மின்னஞ்சல் மற்றும் ஸ்பீட் போஸ்ட் மூலம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களைக் குறிப்பிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே நுபுர் ஷர்மாவுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தில்லி போலீஸார் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications