பிரஷர்.. பூமிக்கடியில் வெடித்து சிதறிய குழாய்.. தார் ரோட்டையே உடைத்து பீறிட்ட தண்ணீர்.. ஷாக் வீடியோ
மகாராஷ்டிராவில் மாநிலம் யவத்மால் பகுதியில் பூமிக்கடியில் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பயங்கர சத்தத்துடன் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பூமிக்கடியில் தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று அந்த குழாய் உடைந்ததில் தார் ரோடு சல்லி சல்லியாக வெடித்து சிதறி தண்ணீர் பீறிட்டது. இதில் ஸ்கூட்டியில் சென்ற பெண் காயமடைந்த நிலையில் பூமிக்கடியில் இருந்து மின்னல் வேகத்தில் ரோட்டை உடைத்து தண்ணீர் வெளியேறும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வரகிறது.
இந்தியாவின் பல இடங்களில் கேபிள் வயர்கள் பூமிக்கடியில் தான் பதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் குடிநீர் குழாய்கள் பூமிக்கடியில் தான் செல்கின்றன. குறிப்பாக பெரிய பெரிய நகரங்களில் பூமிக்கடியில் ராட்சத குழாய்கள் பதித்து குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு செல்லும் குடிநீர் குழாய்களில் வெடிப்பு அல்லது உடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் கசிந்து தரைக்கு மேல் கசியும். பொதுவாக இதனை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

பூமிக்கடியில் குழாய்
ஆனால் மகாராஷ்டிராவில் பூமிக்கடியில் சென்ற குழாய் வெடித்து வெளியேறிய தண்ணீர் தார் ரோட்டையை ரவுண்டாக உடைத்துள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்தது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் பகுதியில் பூமிக்கடியில் குடிநீர் கொண்டு செல்ல வசதியாக ராட்சத குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்க்கு மேல் தார் சாலை போடப்பட்டுள்ளது. அதில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

வெடித்த குழாய்-உடைந்த ரோடு
இந்நிலையில் நேற்று அந்த சாலையில் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. இது என்ன என்று சிந்திப்பதற்குள் தார் சாலையை உடைத்து ஆக்ரோஷமாக தண்ணீர் பீறிட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையே பூமிக்கடியில் இருந்து தண்ணீர் தொடர்ந்து ஆக்ரோஷமாக வெளியேறியது.

பெண் காயம்
இந்த சம்பவத்தில் தார் ரோட்டில் சென்று கொண்டிருந்த அந்த பெண் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி விசாரணை நடத்திப்பட்டது. இந்த விசாரணையின்போது பூமிக்கடியில் சென்ற ராட்சத குழாய் திடீரென்று வெடித்ததில் வெளியேறிய தண்ணீர் ஆக்ரோஷமாக தார் ரோட்டை உடைத்து வெளியேறியது தெரியவந்தது. மேலும் சாலை போட பயன்படுத்தப்பட்ட ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஷாக் வீடியோ
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் சென்று குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியை தொடங்கினர். இதற்கிடையே தார் ரோட்டை சல்லி சல்லியாக நொறுக்கி பீறிட்டு தண்ணீர் வெளியேறிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications