அசத்திய ஜென் ஆல்ஃபா! மைக்காக மாறிய குடை..ரிப்போர்ட்டரான மாணவி! பளபளவென மாறிய குண்டும் குழியுமான சாலை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பள்ளிக்குச் செல்லும் வழியில் சாலை குண்டும் குழியுமாக இருந்த நிலையில் மூன்று பள்ளி மாணவிகள் வித்தியாசமான முறையில் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். குடையை மைக் போல பயன்படுத்தி, செய்தியாளர்கள் போல அவர்கள் நையாண்டி செய்த வீடியோ சமூக வலைதளங்களை வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து இருக்கின்றனர்.

மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அங்குள்ள சாலைகள் மோசமாகி குண்டும் குழியுமாக இருந்திருக்கிறது. மேலும் மழை காரணமாக சேரும் சகதியாகவும் காணப்பட்டது.

Schoolgirls

இதனால் அப்பகுதி மாணவர்கள் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். குறிப்பாக அவ்வழியாக செல்லும் மாணவிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். இந்த பிரச்சனையை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் மாணவிகள் அதற்கும் தீர்வையும் ஏற்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நேஹா கரே, ஜோத்ஸ்னா முகானே மற்றும் மான்சி பவார் ஆகிய மூன்று மாணவிகள் சேர்ந்து அந்த சாலையின் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதில் சிறப்பு என்னவென்றால் செய்தியாளர்கள் போல அவர்கள் வெளியிட்ட வீடியோ தான்.

மைக்குக்கு பதிலாக குடையை பயன்படுத்தி நேகா செய்தியாளர் போலவும் ஜோத்ஸ்னா பொதுமக்களை போலவும் மாறி வீடியோ வெளியிட்டனர்.செய்தியாளர் எழுப்பும் கேள்விகளுக்கு பொதுமக்கள் போல பதில் சொல்ல மான்சி இந்த வீடியோவை செல்போனில் பதிவு செய்திருக்கிறார். மேலும் சாதாரண வீடியோ போல் இல்லாமல் நக்கல் நையாண்டி உடன் இந்த வீடியோவை அவர்கள் உருவாக்கிய நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை லைக் செய்ததோடு மாணவிகளின் முயற்சியையும் பாராட்டினர். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக அந்த சாலையை சீரமைத்தனர். நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்த சாலை மாணவிகளின் வித்தியாசமான முயற்சியால் சரி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுதலை பெற்றுள்ளது. இதற்கிடையே அப்பகுதி பிரச்சனையை சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாற்றிய மூன்று மாணவிகளுக்கும் அப்பகுதி மக்களும் அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மாணவிகளை நேரில் சந்திக்க உள்ளதாக கூறி இருக்கிறார். "எங்கள் மகள்கள் செய்ததை பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இது போன்ற மக்கள் பிரச்சனைகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+