உங்க ஹோட்டல் எப்படி இருந்தது.. கிரிக்கெட் வீரர்கள் போல பேருந்தில் வந்திறங்கிய எம்எல்ஏக்கள்.. செம!
Recommended Video
மும்பை: மும்பையில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் தனியார் பேருந்தில் வந்திறங்கி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இன்று அந்த ஹோட்டலில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் இன்று இரவு செய்தியாளர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் அணிவகுப்பு நடத்துகிறார்கள். மும்பை ஹயாத் ஹோட்டலில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் இதற்காக கூடி உள்ளனர்.
இதில் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நிலவி வரும் நிலையில் முதல்முறையாக சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றுகிறார்கள். தங்கள் பலத்தை மக்களிடம் நிரூபிக்க சிவசேனா இப்படி செய்கிறது.

வேறு ஹோட்டல்
குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் 162 எம்எல்ஏக்களும் வெவ்வேறு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தொடர்பு கொள்வதை தவிர்க்கும் வகையில், வெவ்வேறு இடத்தில் பலத்த பாதுகாப்புடன் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

சில எம்எல்ஏக்கள்
இதில் சில எம்எல்ஏக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அணிவகுப்பு காரணமாக அவர்கள் எல்லோரும் மும்பை ஹயாத் ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர். அணிவகுப்புக்காக எம்எல்ஏக்கள் பேருந்து மூலம் தனியார் ஓட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

சிவசேனா படை
கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஹோட்டலுக்கு பேருந்தில் செல்வது போல வெள்ளை நிற சொகுசு பேருந்தில் இவர்கள் மும்பை ஹயாத் ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஹோட்டலுக்கு வெளியே சிவசேனா தொண்டர்கள் பெரிய அளவில் பாதுகாப்பிற்கு நின்றார்கள். 100க்கும் அதிகமானோர் பாதுகாப்பிற்கு நின்று இருந்தனர்.

பெரிய பாதுகாப்பு
சிவசேனாவின் பெரிய இளைஞர் படை இவர்களை பாதுகாத்தது. எம்எல்ஏக்களின் பேருந்துக்கு பின் இவர்கள் பைக்கில் பாதுகாப்பிற்காக வலம் வந்தனர். உத்தவ் தாக்கரேவிற்கும், சரத் பவாருக்கும் ஆதரவாக கோஷம் எழுப்பிய படியே இவர்கள் வந்தனர்.

கண்டனம்
அதேபோல் மும்பை ஹயாத் ஹோட்டலுக்கு வெளியே ''நாங்கள் 162 (we are 162)'' என்று போஸ்டர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஆளுநருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். தூரத்து உறவினரை பார்ப்பது போல எல்லா எம்எல்ஏக்களும் மற்றவர்களை பார்த்து நலம் விசாரித்து, உங்கள் ஹோட்டல் எப்படி இருக்கிறது, வசதி எப்படி என்று விசாரித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications