"பிளாக் மேஜிக்.." ஓவரா சண்டை போட்ட கணவர்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பகீர் பிளான்! செம ஷாக்

Woman went to black magic to take complete control for her husband: Maharashtra businessman black magic news in tamil.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தனது கணவருக்கே பிளாக் மெஜிக் செய்ய மனைவி முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவர் மனைவிக்கு இடையே இருக்கும் 1000 சண்டைகள் வந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுவாகப் பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், எல்லா சமயங்களிலும் இது நடக்கும் எனச் சொல்ல முடியாது.

பல நேரங்களில் நிலைமை கை மீறிப் போய்விடும். அப்படிதான் மகாராஷ்டிராவில் தொழிலதிபரிடம் அவரது மனைவி செய்த ஒரு கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலம் அந்தேரி பகுதியில் 39 வயதான தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயதில் மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் நிலையம் வந்த இவர் புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகாரில், "எனது மனைவி 13 ஆண்டுகளுக்கு முன்பு பரேஷ் கடா என்பவருடன் உறவில் இருந்தார். இது எனக்குத் தெரிய வந்தது.

புகார்

புகார்

இது தொடர்பாக நான் கேட்ட போது, இருவரும் சுமுகமான முறையில் இதைப் பேசி தீர்த்துக் கொண்டோம். இதற்கிடையே கடந்த அக். இரண்டாவது வாரம் வீட்டில் ரூ. 35 லட்சம் பணத்தை வைத்திருந்தேன். இதை வைத்துத் தான் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்குவதற்காகப் பணத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தேன். பணத்தைப் பார்த்துக் கொள்ளும்படி மனைவியிடமும் கூறி இருந்தேன்" என்று கூறியுள்ளார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அக். 18ஆம் தேதி போனஸ் வழங்கப் பணத்தை எடுக்கச் சென்ற போது அங்குப் பணம் இல்லாததைக் கண்டு தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக மனைவியிடம் கேட்ட போது, தனக்கு எதுவும் தெரியாது எனச் சொல்லியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த தொழிலதிபர் தனது மூத்த சகோதரருக்குக் கால் செய்து, நடந்த விஷயத்தை விளக்கி உள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்த அந்த பெண்ணிடம் பணம் எங்கே போனது எனக் கேட்டுள்ளனர்.

பிளாக் மெஜிக்

பிளாக் மெஜிக்

அப்போது அவர் சொன்ன தகவல்கள் தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்துள்ளது. அதாவது மனைவியின் முந்தை உறவு குறித்த தெரிந்ததில் இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அந்த பெண், தனது கணவரை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார். அப்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் மெஜிக் குறித்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.

எதற்குத் தெரியுமா

எதற்குத் தெரியுமா

இதை உண்மை என நம்பிய அந்த பெண், பிளாக் மெஜிக் மூலம் தனது கணவரை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்ட வரத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்ஸ்டாகிராமில் பார்த்த பாதல் சர்மாவை நேரில் சந்தித்த அந்த பெண், தனது பிரச்சனைகளையும் திட்டத்தையும் அவரிடம் தெரிவித்து உள்ளார். இதெல்லாம் ரொம்பவே ஈஸி பிளாக் மெஜிக் மூலம் கணவரைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் காதல்

முன்னாள் காதல்

இதையடுத்து அந்த பெண் தனது முன்னாள் காதலன் காடாவுக்கு ஃபோன் செய்து இது குறித்துத் தெரிவித்தார். இதையடுத்து உடனே அங்குச் சென்ற கடா பிளாக் மெஜிக் செய்யும் அந்த ஜோதிடரிடம் பேசியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்த அந்த பெண்ணிடம் இருந்து மெல்ல மெல்ல சுமார் சில லட்சம் பணத்தை வாங்கியுள்ளனர். பணம் மட்டுமின்றி பல தங்க நகைகளையும் வாங்கியுள்ளனர். இப்படி மொத்தம் ரூ 59 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளை அந்த பெண்ணிடம் இருந்து வாங்கியுள்ளார்.

புகார்

புகார்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், முதலில் போலீசாரிடம் செல்லாமல் இந்த விஷயத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார். நேரடியாகவே அந்த ஜோதிடரிடம் பேசியுள்ளார். இருப்பினும், அவர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதன் பின்னரே அந்த தொழிலதிபர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோதிடர் மீதும் முன்னாள் காதலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+