Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அழகு வேண்டுமா.. தினமும் இதை பண்ணுங்க.. பாஜக அமைச்சர் தாறுமாறு பேச்சு

Subscribe to Oneindia Tamil

மும்பை: தினமும் மீன் சாப்பிட்டால் நீங்களும் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகையும் கண்களையும் பெறுவீர்கள் என மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் விஜயகுமார் காவித் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பழங்குடியினத் துறை அமைச்சர் விஜயகுமார் காவித் (68) கலந்து கொண்டார். அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Maharastra Minister says that if you eat fish then you will get beauty of Aishwarya Rai

இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் மக்கள் தினந்தோறும் மீனை சாப்பிட வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய தோல் மிருதுவாக இருக்கும். கண்களும் பளீச்சென இருக்கும். யாராவது உங்களை பார்த்தால் அவர்கள் உங்கள் அழகில் மயங்கிவிடுவார்கள். நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா

மங்களூரில் கடலோர பகுதியில்தான் ஐஸ்வர்யா ராய் வசித்து வந்தார். அவர் தினந்தோறும் மீனை உணவாக எடுத்து கொள்வார். அவருடைய கண்களை பார்த்துள்ளீர்களா. அப்படிப்பட்ட கண்களையும் அழகையும் நீங்களும் பெற மீன் உணவை தினந்தோறும் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு காவித் பேசியுள்ளார். அது போல் அவருடைய மகளும் பாஜக எம்பியுமான ஹீனா காவித் பேசுகையில் மீனில் சில எண்ணெய்கள் உள்ளன.

அதனால்தான் அதை சாப்பிட்டால் உங்கள் தோல் மிருதுவாக இருக்கிறது என்றார். இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காவித்திற்கு கண்டனங்கள் குவிகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அமோல் மிட்காரி கூறுகையில் இது போல் அற்பத்தனமான கருத்துகளை கூறுவதை விட்டுவிட்டு பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சினைகளில் அமைச்சர் காவித் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ நிதேஷ் ரானே கூறுகையில் நான் தினந்தோறும் மீன் சாப்பிடுகிறேன். என் கண்களும் ஐஸ்வர்யா ராயின் கண்களை போல் இருக்க வேண்டும். இது குறித்து ஏதாவது ஆராய்ச்சி செய்ய முடியுமா என்பதை காவித்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும் சிலர் ஈ, எறும்பு முதல் மனிதர்கள் வரை அனைத்து படைப்புகளும் அழகுதான்.

இதில் ஒருவரை பற்றி அழகாக இருக்கிறார் என தனித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள். மேலும் மீன் சத்தான உணவு, ஆரோக்கியமான உணவுதான். அதை யாரும் மறுக்கவில்லை. மீனில் உள்ள நன்மைகளை சொல்லி மக்களை சாப்பிட வைக்க வேண்டுமே தவிர இப்படியெல்லாம் பேசக் கூடாது என்கிறார்கள். மீனில் ஓமேகா 3 கன்டென்ட் இருக்கிறது. மீனில் பொதுவாகவே விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு நல்லது என்பார்கள்.

மீனில் புரதச்சத்து இருக்கிறது. சூரிய வெளிச்சத்தில் கிடைக்கும் விட்டமின் டி, மீனில் கிடைக்கிறது. மீன் உணவு மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மாரடைப்புகளையும் பக்கவாதத்தையும் தடுக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுகிறது. வயதாகும் போது ஏற்படும் பார்வை கோளாறுகளை தடுக்கிறது. நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+