உருவாகும் 2 அணிகள்.. தேசியவாத காங்கிரசை மொத்தமாக உடைக்க பிளான்.. அமித் ஷாவின் அதிரடி திட்டம்!
மகாராஷ்டிராவில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா முக்கிய திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா முக்கிய திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
மகாராஷ்டிராவில் திடீர் என்று நேற்று அதிகாலை பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார். இதனால் அவருக்கு தற்போது துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு அஜித் பவார் ஆதரவு அளித்தாலும் கூட பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.

என்ன திட்டம்
இந்த நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா முக்கிய திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள். தற்போது சட்டசபையை கூட்டினால், தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்எல் ஏக்களை எல்லாம் தகுதி நீக்கம் செய்யும். இது பாஜகவிற்கு பெரிய தோல்வியாக மாறும்.

தேசியவாத காங்கிரஸ் உடைப்பு
அதற்கு பதிலாக பாஜக மொத்தமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க போகிறது என்கிறார்கள். அதாவது அஜித் பவார் தலைமையில் இருக்கும் எம்எல்ஏக்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி. அஜித் பவாரின் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் நேற்று பாஜக காய் நகர்த்த திட்டமிட்டுள்ளது.

இரண்டு அணிகள்
தமிழகத்திலும் இதேபோல் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று இரண்டு அணிகள் அதிமுகவில் உருவானது. அதேபோல்தான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை மொத்தமாக உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அப்படி செய்தால், சரத் பவாரால் தகுதி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

ஆனால் சிக்கல்
ஆனால் பாஜகவிற்கு முக்கியமான சிக்கல் ஒன்று உள்ளது. தற்போது அஜித் பவாருக்கு பின் 5 எம்எல்ஏக்கள் வரை மட்டுமே ஆதரவு இருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் 37 எம்எல்ஏக்கள் ஆதரவு பாஜகவிற்கு தேவை. அவர்களுக்கு 30ம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் உள்ளது.

என்ன செய்வார்கள்
இதனால் அதற்குள் பாஜக கட்சி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும். ஒரு வாரத்திற்குள் தேசியவாத காங்கிரஸ் கட்சியே மொத்தமாக முறியும் என்று கூறுகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications