Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்! டெங்கு + மலேரியா+ லெப்டோஸ்பிரோசிஸ்! ஒரே நேரத்தில் சிறுவனை தாக்கிய நோய்கள்! அடுத்து நடந்த பகீர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் சிறுவன் ஒருவனுக்கு ஒரே நேரத்தில் டெங்கு, மலேரியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் என்று மூன்று விதமான பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இப்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பல தொற்று நோய்கள் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதற்கிடையே மும்பை சேர்ந்த 14 வயதான சிறுவனுக்கு வினோதமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.

 Malaria, lepto, dengue attacked Mumbai boy at same time dies within 3 days

அந்த சிறுவனுக்கு ஒரே நேரத்தில் டெங்கு, மலேரியா, லெப்டோஸ்பிரோசிஸ் என்று மூன்று பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அந்த சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல்: இருப்பினும், அந்த சிறுவனின் குடும்பத்தினர் அதை முதலில் சாதாரண காய்ச்சல் என்றே நினைத்துள்ளனர். இதனால் முதலில் அவர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. முதலில் அருகில் இருந்த ஒருவரிடம் கேட்டு வீட்டு வைத்தியமே கொடுத்து வந்துள்ளனர். இங்கு தான் அந்த சிறுவனுக்கு பிரச்சினை ஆரம்பித்துள்ளது.

இருப்பினும், சிறுவனுக்குக் காய்ச்சல் அதிகமாகவே இருந்துள்ளது. காய்ச்சல் குறையவே இல்லை. இதனால் வேறு வழியின்றி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அவர்கள் அங்குள்ள கஸ்தூர்பா அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். சிறுவனின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடலில் ஏதோ தப்பாக இருப்பதை உணர்ந்தனர். இதையடுத்து மருத்துவ சோதனைக்கும் எழுதிக் கொடுத்துள்ளனர்.

டெங்கு & மலேரியா: மருத்துவ சோதனையில் அவருக்கு டெங்கு மற்றும் மலேரியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அதற்கேற்ப சிகிச்சை கொடுத்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு வேறு சில சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு லெப்டோஸ்பிரோசிஸ் பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

இருப்பினும், எதுவும் பலன் அளிக்கவில்லை. அந்த சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தே வந்துள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காகச் சிறுவன் மும்பை சென்ட்ரலில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் அந்த சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஒரு கட்டத்தில் அந்த சிறுவனுக்குத் தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலும் கூட ஏற்பட்டது. இந்த சுவாசக் கோளாறு காரணமாகச் சிறுவனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கிரியேட்டினின்: அந்த சிறுவனின் உடலில் கிரியேட்டினின் அளவு அதிகமாக இருந்துள்ளது. கிரியேட்டினின் என்பது தசைகளில் ஆற்றலை உருவாக்கும் பிராசஸில் மிதமாகும் ஒரு ரசாயன கலவை ஆகும். உடலில் ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருந்து இந்த கிரியேட்டினினை வடிகட்டும். கிரியேட்டினின் சிறுநீர் மூலம் வெளியேறும். கிட்னியில் பிரச்சினை ஏற்படும் போது இந்த கிரியேட்டினின் அளவு அதிகமாக இருக்கும்.

இதனால் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது சிறுவனுக்கு பல்வேறு சிகிச்சைகளை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். இருப்பினும், சிறுவனின் உடலில் ஏற்பட்ட பாதிப்பு கட்டுக்குள் வரவே இல்லை. அறிகுறிகள் மோசமாகி, தொற்று உடல் முழுக்க பரவி உள்ளது. ஒரு கட்டத்தில் சிறுவனின் உடல்நிலையும் வரிசையாகச் செயலிழக்கத் தொடங்கியுள்ளது. பல உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3ஆம் நாள் உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு: இது குறித்து மூத்த மருத்துவர் கிரிஷ் ராஜாதிக்ஷா கூறுகையில், "ஒருவருக்கு இதுபோல ஒரே நேரத்தில் 3 வித பாதிப்புகள் ஏற்படுவது அரிது. பொதுவாக ஒரு பாதிப்பு மட்டுமே நமக்கு ஏற்படும்.. சில அரிதான நேரங்களில் இதுபோல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் மருத்துவமனைக்கு வரும் போது சிறுவனின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவர்கள் முன்கூட்டியே மருத்துவ உதவியை நாடியிருந்தால் சிறுவனைக் காப்பாற்றியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. மும்பையில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 959 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல 265 பேருக்கு லெப்டோஸ்பிரோசிஸ் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி பல பகுதிகளும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+