மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மராத்தா vs பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் யுத்தம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மராத்தா ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு இடையேயான 'இடஒதுக்கீடு' யுத்தமும் தீவிரமாகி வருகிறது. மகாராஷ்டிரா அரசியல் கட்சிகளுக்கு இந்த இரு ஜாதிகளிடையேயான யுத்தம் மிகப் பெரும் சவாலாகவும் தேர்தல் களத்தில் உருவெடுத்து நிற்கிறது.
மகாராஷ்டிராவில் முன்னேறிய வகுப்பில் உள்ள மராத்தா ஜாதியினர் தங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமை கோரி நீண்டகாலம் போராடி வருகின்றனர். இதற்கு இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் விழிபிதுங்கி இருக்கின்றன. மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு வழங்கினாலும் நீதிமன்றங்கள் ரத்து செய்து விடுகின்றன; வேறுவகையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தாலும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் மராத்தா மக்கள் தங்களுக்கான இடஒதுக்கீடு உரிமைக்காக மிகப் பிரம்மாண்டமான, அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியைத் தரக் கூடிய பிரம்மாண்ட போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். தற்போது மனோஜ் ஜாரங்கி தலைமையில் மராத்தா ஜாதி மக்கள் ஒருங்கிணைந்து திரண்டு நிற்கின்றனர். மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீடு விவகாரத்தில் தற்போதைய பாஜக கூட்டணி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
அதுவும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மராத்தா - இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளிடையேயான யுத்தம் உக்கிரமாகி வருகிறது. மனோஜ் ஜாரங்கி என்கிற ஒரு தனி மனிதருக்காக எப்படி மகாராஷ்டிரா அரசு வளைந்து போக முடியும்? அதை எப்படி நாங்கள் அனுமதிப்போம் என்கின்றனர் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்கள். அத்துடன் மராத்தா ஜாதியினருக்கு எங்களுடைய இடஒதுக்கீட்டில் உரிமை இல்லை என அறிவித்தாக வேண்டும் மாநில அரசு எனவும் கெடுவும் விதிக்கின்றனர்.
இத்தகைய ஜாதிகளிடையேயான மோதல், அரசியல் கூட்டணிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை எதிர்கொள்ள மராத்தா மனோஜ் ஜாரங்கிதான் காரணம் என்கிற குமுறல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே இருக்கிறது. இதனால் மராத்தா ஜாதியின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்ற குரலும் வலுக்கிறது.
அதேபோல இந்தியா கூட்டணிக்குள்ளும் இருதரப்புக்கும் ஆதரவான நிலை மையம் கொண்டிருக்கிறது. இரு ஜாதிகளிடையேயான இடஒதுக்கீடு யுத்தம், இரு அரசியல் கூட்டணிகளுக்குள்ளும் மிகப் பெரும் குழப்பத்தையும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு காண முடியும் என்பது தெரியாமல் பாஜக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 'திக்கு தெரியாமல்' விழித்துக் கொண்டிருக்கின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications