Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உனக்கு 27, எனக்கு 53.. படுக்கை அறையில் கணவனின் ஆசை... கல்யாணமான 15 நாளில் எமனாக மாறிய ராதிகா

Subscribe to Oneindia Tamil

மும்பை: மேகாலயா தேனிலவு பாணியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாங்கிலி மாவட்டம் குப்வாட் தாலுகாவில் வசித்து வந்த 53 வயதாகும் அனில் லோகண்டே என்பவர்,கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராதிகா என்ற 27 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். ஆனால் தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதில் ராதிகாவுக்கு விருப்பம் இல்லை. வெறும் 2வது வாரத்திலேயே அனிலுக்கு எமனாக மாறியுள்ளார் மனைவி. என்ன நடந்தது என்பதை பார்ப்போம.

தேனிலவு ஆரம்பிக்கும் முன்பே கணவன்களை பரலோகத்திற்கு அனுப்பும் சம்பவங்கள் இந்தியாவில் ஆங்காங்கே நடக்கின்றன. விருப்பம் இல்லாமல் திருமணம் செய்யும் சில பெண்கள், காதலன் வந்து கூப்பிட்டதும் செல்ல விரும்புகிறார்கள். அதற்கு இடையூறாக இருக்கும் கணவன்களை காலி செய்கிறார்கள்.

Meghalaya honeymoon style what did 27 year old wife do to 53 year old husband in Maharashtra

மேகாலயா தேனிலவு பாணி

அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி. திருமணமான இவர் கடந்த மாதம் மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, மனைவி சோனமின் சதித்திட்டத்தால் கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டப்பட்டார். காதலரை கரம்பிடிக்க முடியாமல் போனதால் இவர் இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுவரை சோனம் மற்றும் 4 பேரை போலீசார் கைது செய்யதுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு ஓயும் முன்பே மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

2வது திருமணம்

மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டம் குப்வாட் பகுதியைச் சேர்ந்த 53 வயதாகும் அனில் லோகண்டே வசித்து வந்தார். இவரது முதல் மனைவி புற்றுநோயால் காலமானார். இதையடுத்து அனில் லோகண்டே கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராதிகா என்ற 27 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார்.

தாம்பத்திய வாழ்க்கை

ஆனால் தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதில் ராதிகாவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் அனில் லோகண்டே மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி எரிச்சலடைந்தார். அவர் தனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தவே, கணவன்-மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளதாம். பின்னர் அனில் லோகண்டே தூங்க சென்று விட்டார்.

உறக்கத்திலேயே முடிந்தது

வயதானவரை கல்யாணம் செய்ததால் தனது வாழ்க்கையை நினைத்து புலம்பிய ராதிகா, அவரது கணவரை காலி செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணி அளவில் அனில் லோகண்டே நல்ல உறக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. அப்போது ராதிகா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து வந்து படுக்கையில் இருந்த கணவரை கடுமையாக தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அனில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது உறவினருக்கு போன் செய்து ராதிகா கூறினார்.

விருப்பம் இல்லாமல் திருமணம்

இதற்கிடையே தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனில் லோகண்டேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராதிகாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராதிகாவின் விருப்பத்துக்கு மாறாக அவரது தந்தை வயதுள்ள அனில் லோகண்டேவுக்கு திருமணம் செய்து வைத்ததால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. ராதிகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+