"மாணவர்கள் போராடினால் தேச விரோதிகளா?" Gen Zக்கு ஆதரவாக வந்த மோகன் பகவத்.. அதிரடி கருத்து!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் இளம் தலைமுறையினரான Gen Z குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. அதாவது Gen Z மற்றும் Gen Alpha தலைமுறையினர் போராட்டங்களில் ஈடுபடும்போது அவர்களை தேச விரோதிகள் என்று அழைக்கக் கூடாது என்றும் இன்றைய இளைஞர்களை கண்மூடித்தனமாக நம்புவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் டெல்லியில் Gen Z மாணவர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு கிடைத்தது. வேறு வழியில்லாமல் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரம் போராடிய மாணவர்களை சிலர் தேச விரோதிகள் என்றும் அழைத்தனர். அதை தான் ஆஎஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கண்டித்துள்ளார்.

RSS Mohan Bhagwat Gen Z

மாணவர் போராட்டம்

மும்பையில் ஐநாவின் சர்வதேச இயக்கத்தின் (IIMUN) 15-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சுமார் 2,000 Gen Z மற்றும் Gen Alpha இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்ஆஸ் தலைவர் மோகன் பகவத், இளம் தலைமுறையினரின் கருத்துகளையும், அவர்களின் கேள்விகளையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுமையாக கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆதரவாக கருத்து

இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து பேசிய பகவத், "Gen Z எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபட்டால் அவர்கள் தேச விரோதிகள் என்று அர்த்தமல்ல. அவர்கள் நம்முடையவர்கள் தான். அவர்கள் தான் நமது அடுத்த தலைமுறை. இளைஞர்களுக்கும் அரசுக்கும் இடையே நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் இருந்தால் தான் அர்த்தமுள்ள உரையாடல் சாத்தியமாகும். இளைஞர்கள் கேள்விகள் எழுப்பினாலே அதை எதிர்ப்பதாக பார்க்கக்கூடாது. மாற்றத்திற்கான முயற்சியாக மட்டுமே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேநேரம் சமீபத்தில் நடந்த போராட்டங்களில் போலீஸ் மற்றும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்து தனக்கு முழுமையான தகவல்கள் தெரியவில்லை என்று மோகன் பகவத் குறிப்பிட்டார். அவர் மேலும், "நான் Gen Zஐ கண்மூடித்தனமாக நம்புவேன். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. பல்வேறு தகவல்கள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் தான் நாம் பேசுகிறோம். அந்த போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே உறுதியான தகவல்கள் இல்லாமல் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது.

தடுக்க மாட்டேன்

இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் தடுக்க மாட்டேன். ஜனநாயகத்தில் போராட்டமும் மக்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு வழி தான். எனவே, Gen Z இளைஞர்கள் போராடக் கூடாது என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால் ஜனநாயகத்தில் அதற்கான வழிமுறைகளும் உள்ளன. இளைஞர்கள் குரல் எழுப்பினால், அது வெறுமனே எதிர்ப்பதற்காக அல்ல.. முன்னேற்றத்திற்காக இருக்க வேண்டும்.

கேள்வி கேட்க தான் செய்வார்கள்

இன்றைய Gen Z மற்றும் Gen Alpha தலைமுறையினர் முந்தைய தலைமுறைகளைவிட அதிகாரத்தை நோக்கி அதிகம் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்காக தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் வயதில் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேள்வி கேட்க மாட்டோம். ஆனால் Gen Z மற்றும் Gen Alpha கேள்வி கேட்கிறார்கள். அதற்கு சரியான பதில் வேண்டும் என்பதையும் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.

இந்தியாவின் கல்வி அமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுவதாக மோகன் பகவத் தெரிவித்தார். கல்வி வணிகமாக மாறக்கூடாது என்றும் கல்வியை வழங்குவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, சமூகத்தின் பொறுப்பும் கூட என்றும் அவர் கூறினார். மேலும், கல்விக்காக நாட்டின் பட்ஜெட்டில் 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+