மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் 'கூவத்தூர்' சூரத்துக்கு படையெடுக்கும் சிவசேனா எம்.எல்.ஏக்கள்- பீதியில் உத்தவ் தாக்கரே!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் மேலும் பலர் குஜராத்தின் சூரத் நகருக்கு படையெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Maharashtra Political Crisis | Uddhav Thackeray Speech | Shivsena

    மகாராஷ்டிராவில் தற்போதைய நிலையில் சட்டசபையில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு (மொத்தம் 288 இடங்கள்; 1 எம்.எல்.ஏ. மறைவு) 168 எம்.எல்.ஏக்கள்; பாஜகவுக்கு 113; இதர - 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்கிற நிலை உள்ளது.

    More Shiv Sena leaders likely to join rebel MLAs in Gujarat

    மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 144. சிவசேனாவின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவுடன் மொத்தம் 26 எம்.எல்.ஏக்கள் குஜராத்தின் சூரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு எதிரான 26 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்துவிட முடியாது. இதனால் மேலும் பல எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    "இது மத்திய பிரதேசம் இல்லை, மகாராஷ்டிரா.. உங்கள் பிளான் வேலைக்காகாது!" ஓப்பனாக எச்சரிக்கும் சிவசேனா

    மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக செய்ததைப் போல கூண்டோடு ராஜினாமா செய்ய வைப்பது அல்லது; நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களிக்க வைப்பது போன்ற வியூகங்களில் பாஜக மும்முரமாக உள்ளது.

    அப்படி மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ந்தால் பெரும்பான்மைக்கான 144 எம்.எல்.ஏக்களைப் பெறுவதற்காக மேலும் பல எம்.எல்.ஏக்களை குஜராத்தின் சூரத் ரிசார்ட்டுக்கு பாஜக அனுப்பி வைக்கும்.

    மகாராஷ்டிரா ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பாஜக? சிவசேனாவின் 13 எம்.எல்.ஏ.க்கள் குஜராத்தில் தலைமறைவு? மகாராஷ்டிரா ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பாஜக? சிவசேனாவின் 13 எம்.எல்.ஏ.க்கள் குஜராத்தில் தலைமறைவு?

    தமிழகத்தில் 2017-ல் அதிமுகவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அக்கட்சி எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா தங்க வைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அதேபோல இப்போது குஜராத்தின் சூரத் நகரம் இன்னொரு கூவத்தூராக உருவெடுத்துள்ளது.

    இதனிடையே சூரத்தில் தங்கி உள்ள தமது எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிவசேனா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் சிவசேனாவின் உட்கட்சி விவகாரத்தில் தமது கட்சி தலையிடாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருக்கிறார்.

    மேலும் மகாராஷ்டிரா வேளாண் அமைச்சர் தாதா பூஷேவும் சூரத் செல்லக் கூடும் என்றும் கூறப்படுகிறது. சூரத்தில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவின் தீவிர ஆதரவாளர் பூஷே.

    மகாராஷ்டிரா அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து அம்மாநில விவகாரங்களை கையாளும் பொறுப்பு மூத்த தலைவர் கமல்நாத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Sources said that More Shiv Sena leaders likely to join rebel MLAs in Gujarat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X