ரோஜாவையா கீழ்த்தரமா பேசுறீங்க! அக்கா தங்கச்சி கூட பொறக்கல! வெளுத்த நவ்நீத் கவுர் எம்.பி.
மும்பை: அமைச்சர் ரோஜாவை கீழ்த்தரமாக கருத்துகளை சொல்ல வெட்கமே இல்லையா என நடிகையும் எம்பியுமான நவ்நீத் கவுர் பண்டாரு சத்யநாராயணனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடைய கட்சியினரால் மிகவும் அவமானத்துக்குள்ளான ரோஜா இந்த சம்பவத்தை சாதாரணமாக விடுவாரா?

குத்தாட்டம் போடாத குறையாக கொண்டாடி மகிழ்ந்தார். இது தெலுங்கு தேசம் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாட்டை எப்படி காட்டுவது என தெரியாமல் சிக்கலில் சிக்கிக் கொண்டார் பண்டாரு சத்யநாராயணன். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகியாவார்.
இவர் ரோஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளார் என ஒரு கடும் விமர்சனத்தை முன் வைத்தார். இதுதான் தற்போது இந்தியாவில் பலர் கொதித்தெழ காரணமாகிவிட்டது. ரோஜாவும் இதுகுறித்து பிரஸ் மீட் வைத்திருந்தார். நான் ஆபாச படங்களில் நடித்தேன் என கூறி ஒரு வீடியோ சட்டசபையில் பண்டாரு வெளியிட்டுள்ளார்.
அதில் நடித்தது நான்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பண்டாரு வீட்டில் தாய், மனைவி, மகள், சகோதரி இவர்கள் எல்லாம் இல்லையா? என்னை கட்சியிலிருந்த போதும் டார்ச்சர் செய்தார்கள் .இப்போதும் இப்படித்தான் டார்ச்சர் செய்கிறார்கள் என ரோஜா கண்ணீர் விட்டு அழுதார். மேலும் இதை நான் சும்மா விடமாட்டேன்.
பண்டாரு மீது மான நஷ்ட வழக்கு கேட்பேன் என்றார். இந்த நிலையில் ரோஜாவுக்கு ஆதரவாக நடிகைகள் ராதிகா, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். பண்டாருவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் நடித்த நவ்நீத் கவுரும் ரோஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் அமராவதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார். அவருடைய கணவர் ரவி ராணாவும் அரசியல்வாதிதான். இதுகுறித்து நடிகை நவ்நீத் கவுர் கூறுகையில் "பண்டாரு! உங்களுக்கு வெட்கமே இல்லையா, அமைச்சர் ரோஜா மீது இத்தனை கீழ்த்தரமாக பேசுகிறீர்களே? உங்கள் வீட்டில் மனைவி, மகள், சகோதரி இப்படி யாரும் இல்லையா,
தெலுங்கு மாநிலங்களில் பெண்களை கவுரவிப்பார்கள். ஆனால் இந்த பண்டாரு பெண்களின் கவுரவத்தை குறைத்து கேவலமாக பேசியிருக்கிறார். உங்களுக்கு அரசியல் முக்கியமா? பெண்களின் கவுரவம் முக்கியமா? உங்கள் பேச்சுக்கு வெட்கப்படுங்கள்.
நான் ரோஜாவிற்கு ஆதரவாக இருப்பேன். சினிமா துறைக்கு ரோஜா இணையில்லா சேவை செய்திருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அவரை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக பேசியது சரியல்ல. நான் கடுமையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு?












Click it and Unblock the Notifications