பொண்ணு யாரு.. நம்ம அம்பானி மகளாச்சே.. இன்விடேஷனே அசத்துது பாருங்க!
அம்பானி மகள் கல்யாண பத்திரிகை வைரலாகி வருகிறது.
Recommended Video

மும்பை: திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனா திருமண நிச்சயிமே சொர்க்கத்தில் நடந்தது மாதிரி இருந்தது என்றால் அது நம்ம அம்பானி பெண்ணுக்குத்தான்!!
எப்பவுமே நம் நாட்டில் பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்து எல்லாரையும் ஏங்க வைத்து வந்து கொண்டிருப்பவர் அம்பானிதான். பணம் இருக்கிறதாலோ என்னவோ வீட்டு விசேஷங்கள் எல்லாம் ராஜ வாழ்க்கை கண்ணில் தெரிகிறது. கொஞ்ச நாள் முன்னாடிதான், முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் கோவாவில் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ஆனந்த் பிரமோல்
இப்போது, அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை என்பவரைதான் இஷா காதலித்து வந்தார். இந்த லவ் மேட்டர் வீட்டருக்கு தெரியபோய், இரு வீட்டிலும் க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. இவர்களின் கல்யாணமும் டிசம்பர் மாசம் 12-ந்தேதி நடக்க போகிறது.

நிச்சயதார்த்தம்
அதனால் இவர்களுக்கு நிச்சயம் நடைபெற்றது.. எங்கே தெரியுமா? இத்தாலியில்! எத்தனை நாள் தெரியுமா? நிச்சயதார்த்தம் மட்டும் 3 நாட்கள் நடந்தது!! அதற்கு ஆன செலவோ கோடியோ கோடிகள்! நிச்சயதார்த்தத்துக்கு வந்தவர்கள் பெரும்பாலும் ஹாலிவுட் கலைஞர்கள்தான்!! சாப்பாடு வகை மட்டும் 50-க்கும் மேல்!! இதற்கே எல்லாரும் ஆவென வாயை பிளந்துவிட்டார்கள். தற்போது கல்யாண வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இருவரின் இன்ஷியல்
முக்கியமாக பத்திரிகை அடித்து வெளிவந்திருக்கிறது. அந்த கல்யாண பத்திரிகைதான் இப்போ ஹாட் டாப்பிக்! நாம் அச்சடிக்கும் இரண்டு பக்க கல்யாண பத்திரிகை போல அது இல்லை. ஒரு பெட்டி மாதிரி, புத்தக வடிவில் அந்த கல்யாண பத்திரிகை ரெடி பண்ணி இருக்கிறார்கள். பத்திரிகையின் மேலே மேல் இஷா ஆனந்த் ஆகியோரின் முதல் எழுத்தைக் குறிக்கும் வகையில் ia என்ற எழுத்து அச்சடிக்கப்பட்டுள்ளது.

காயத்ரி மந்திரம்
அடுத்து, பத்திரிகையின் உள்ளே போனால், இஷா-ஆனந்த் இருவரும் தங்கள் திருமணத்தில் பங்கேற்று அனைவரும் ஆசி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிறகு பத்திரிகை உள்ள பாக்ஸை திறந்தால், காயத்ரி மந்திரம் ஒலிக்கிறது. இந்த பத்திரிகைக்குள்ளேயே மேலும் 4 குட்டி குட்டி பாக்ஸ்கள் உள்ளன. அதில் விருந்தினர்களுக்கான பரிசுகள் உள்ளன. அதாவது விலை உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுளின் சிறிய சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் பரிசாக ஒரு நகை உள்ளது. இந்த கல்யாண பத்திரிகை விலை என்ன தெரியுமோ? சுமார் 3 லட்சமாம்.
|
அம்பானி வீட்டு கல்யாணம்
கல்யாண பத்திரிக்கையே இத்தனை பிரம்மாண்டம் என்றால், கல்யாணம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் அல்லாமல் உலக மக்களுக்கே ஏற்பட்டுள்ளது. அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சும்மாவா என்ன? இந்த பத்திரிகைதான் வைரலாகி வருகிறது. இதையெல்லாம் நாம் இப்படி பார்த்துக்கிட்டாதான் உண்டு!!












Click it and Unblock the Notifications