முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தும் பால் எது தெரியுமா? விலையை கேட்டால் ஆடி போய்டுவீங்க!
மும்பை: அம்பானி குடும்பத்தினர் தினமும் குடிக்கும் பாலின் விலையை கேட்டாலே பலருக்கு ஆச்சரியம் ஏற்படும். அந்த பால் புனேவிலிருந்து கொண்டு வரப்படுகிறது. புனேவில் உள்ள பண்ணையில் இருந்து இந்த அதிக ஊட்டச்சத்து மற்றும் புரத உள்ளடக்கத்திற்காக அறியப்படுகிறது.
பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இருப்பதால் கண்டிப்பாக உணவில் பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பாலில் உள்ள கால்சியம், தசைகள், எலும்புகள், பற்கள், தோல், கண் பார்வை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

இதனால்தான் காபி, டீயை விட காலையிலும் இரவிலும் பால் குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குழந்தைகளுக்கும் தாய்ப்பாலுக்கு பிறகு பசும் பாலை பழக்கப்படுத்த கூறுகிறார்கள்.
இந்த பால் ஒரு லிட்டர் ரூ. 40 முதல் ரூ. 60 வரை விற்கப்படுகிறது. இது ஆவின், தனியார் பால் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுக்களுக்கேற்ப மாறுபடும். மாநிலங்களுக்கிடையே கூட பால் விலை மாறும். அப்படியுள்ள சூழலில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தினமும் விலை உயர்ந்த பாலை குடிக்கிறார்களாம்.
அந்த பாலின் பெயர் ஹோல்ஸ்டீன் ப்ரீசியன் ஆகும். இதில் அதிகபடியான புரதம் இருக்கிறது. தேவையான ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. இந்த பாலை தரும் பசுக்கள் புனேவில் உள்ள பாக்கியலட்சுமி மாட்டு பண்ணையில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. அங்கு 35 ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன. இவற்றின் பால் லிட்டர் ரூ 152 ஆகும்.
இந்த மாடுகளின் பால் நல்ல தரமானதாக இருக்க அதற்கு சிறப்பு கவனிப்புகளை செய்யப்படுகின்றன. கேரளாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ரப்பர் கோட்டட் மெத்தையில் மாடுகள் படுத்துறங்குகின்றன. அது போல் மாடுகளுக்கு குடிக்கும் நீர் கூட ஆர்.ஓ. எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர்தான் வழங்கப்படுகின்றன.
இந்த மாடுகள் நெதர்லாந்தை சேர்ந்தவை. இந்த மாடுகள் உலக அளவில் பால் பண்ணைக்கான இனமாகும். இந்த மாடுகள் கருப்பு , வெள்ளை அல்லது சிவப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். இவற்றை பார்த்தாலே இந்த ரகம் என தெரிந்து விடும். இந்த மாட்டின் கன்றுகள் பிறக்கும் போது 40 முதல் 50 கிலோ வரை எடை இருக்கும். அவரை வளர்ந்ததும் 680 கிலோ முதல் 770 கிலோ வரை இருக்கும். தினமும் 25 லிட்டர் பால் கறக்கும்.
இந்தஹோல்ஸ்டீன் மாட்டின் பாலில் ஏ1 மற்றும் ஏ2 பீட்டார் கேசின் புரதங்களும் தேவையான புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகளும் இருக்கும். இதனால் இது அதிக ஊட்டச்சத்தான பாலாகும். இந்த பாலைத்தான் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications