முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சொகுசு கார்.. விலையை கேட்டால் தலையே சுற்றிடும்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
மும்பை: ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி தற்போது விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். பல்வேறு பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட அந்த காரின் விலை எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடிகளை தாண்டும். இவருக்கு சொந்தமாக மும்பை அன்டீலியா வீடு உலகில் மிக விலையுயர்ந்த 10 வீடுகளில் ஒன்று. முகேஷ் அம்பானியிடம் ரோல்ஸ் ராய்ஸ் உள்பட ஏராளமான ஆடம்பர கார்களும் உள்ளன.

முகேஷ் அம்பானியிடம் மட்டும் இல்லை அவரது மனைவி, நீட்டா அம்பானி மற்றும் பிள்ளைகள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகியோரும் வித விதமான பல கார்களை வைத்து இருக்கிறார்கள். இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு இருக்கும் அச்சுறுத்தலை கணக்கில் கொண்டு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி அவ்வப்போது தனது சொகுசு காரில் பாதுகாப்பு புடை சூழ செல்லும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவும். முகேஷ் அம்பானியிடம் வெளிநாட்டு இறக்குமதி கார்களே பல உள்ளன. சமீப காலமாக மெரிசஸ் பென்ஸ் எஸ்600 ரக புல்லெட் புரூப் காரைத்தான் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், தற்போது முகேஷ் அம்பானி புதிய காரை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்.
மெர்சிடஸ் பென்ஸ் எஸ் 680 என்ற சொகுசு செடான் ரக காரை முகேஷ் அம்பானி பயன்படுத்தி வருகிறாராம். இதன் விலையை கேட்டால் ஒரு நிமிடம் தலைசுற்றி போய் விடுவீர்கள்... அப்படி எவ்வளவுதான் என்று கேட்கிறீர்களா? முகேஷ் அம்பானி தற்போது பயன்படுத்து மெர்சிடஸ் பென்ஸ் எஸ் 680 காரின் விலை சுமார் 10 கோடியை தாண்டும்.
ரோல்ஸ் ராய்ஸ்காரின் விலையை விட அதிக விலைக்கு விற்பனையாகும் இந்தக் காரில் அப்படி என்னதான் விசேஷம் என்றால் முழுக்க முழுக்க பாதுகாப்பு அம்சங்களை கொண்டு இருக்கிறதாம். வழக்கமான செடான் ரக கார்களை விட 2 டன்கள் அதிக எடை கொண்டதாம். அதோடு பாதுகாப்பிற்காக பல அடுக்கு கிளாஸ் லேயர்களை கொண்டது. புல்லெட் புரூஃப் , பிளாஸ்ட் புரூஃப் ஆகிய வசதிகளை கொண்டது.
இதனால் வெடி குண்டே வீசினாலும் இந்த காருக்கு எந்த சேதமும் ஏற்படாது. முகேஷ் அம்பானியிடம் இது போக ரோல்ஸ் ராய்ஸ் Cullinan SUV, லம்போர்கினி Urus, மெர்சிடஸ் ஏஎம்.ஜி ஜி63, லேண்ட் ரோவர் ரேஞ் ரோவர் ஆட்டோபையாகிராபி, மெர்சிடஸ் மேபச் எஸ் 580 உள்ளிட்ட ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications