அண்ணன் முகேஷ் அம்பானி இப்படி செய்வார்ன்ணு நினைச்சிருக்க மாட்டாரு .. அதிர்ச்சியில் அனில் அம்பானி
Recommended Video
மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி, தெற்கு மும்பை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிண்ட் டோராவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருப்பது அவரது தம்பி அனில் அம்பானிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் அண்ணன் தம்பிகள் என ஊருக்கே தெரியும். அண்மையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி, கடன் பிரச்னையில் சிக்கி, சிறை செல்லும் இக்கட்டான நிலை உருவானது.
அப்போது ஸ்பெக்ட்ரமை வாங்கிக்கொண்டு தனது தம்பி அனிலை கடனில் இருந்து காப்பாற்றினார் முகேஷ் அம்பானி. இதற்காக அனில், தனது அண்ணன், அண்ணிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தார்.

திட்டும் ராகுல்
இது ஒரு புறம் எனில், அனில் அம்பானியை ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டபடி திட்டி தீர்த்துவருகிறார்கள். இதனால் வருத்தத்தில் இருக்கும் அனில் அம்பானிக்கு அவரது அண்ணன் முகேஷ் அம்பானியின் செயல் நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.

வீடியோ விட்ட முகேஷ்
முகேஷ் அம்பானி, தெற்கு மும்பை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிண்ட் டோராவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "மிலிண்ட், தெற்கு மும்பைவாசி.. மிலிண்ட், நம் ஊரீன் சமூக, பொருளாதார, காலச்சார பழக்க வழக்கங்களை அறிந்தவர் அவர் தெற்கு மும்பையில் போட்டியிடுகிறார். அவருக்கு என் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர் பூரிப்பு
இந்த வீடியோவை பார்த்து மிலிண்ட் டோரா பூரித்து போய் உள்ளார். சாதாரண மளிகை கடைக்கார்கள் முதல் மிகப்பெரிய தொழில் அதிபர்கள் வரை தெற்கு மும்பையில் என்னை ஆதரிக்கிறார்கள். நாங்கள் மும்பையில் வணிகத்தை மேம்படுத்தி நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திட்டும் காங்கிரஸ்
அதேநேரம் இந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உள்பட காங்கிரசின் பல்வேறு தலைவர்கள், ஊர் ஊராக போய் ரபேல் விவகாரத்தில் மோடியையும் அனில் அம்பானியையும் திட்டி தீர்த்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களூக்கு அண்ணன் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து இருப்பது தம்பி அனிலுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
-
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications