Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா! ஊழியருக்கு 1,500 கோடி மதிப்புள்ள வீடு.. பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி.. காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் பணியாற்றும் நிர்வாகி ஒருவருக்கு 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்து இருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையில் வீடு பரிசாக பெற்ற அந்த நிர்வாகி யார்? என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.7 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. டெலிகாம், ரீடெயில் என பல துறைகளில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கோலோச்சி வருகிறது.

Mukesh Ambani gifted a house worth 1,500 crores to an employee, what is the reason

உலகப் பெரும் பணக்காரர்கள் 100 பேரை எடுத்தால் அதிலும் கண்டிப்பாக இடம் பெறும் முகேஷ் அம்பனி தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு ரூ.1,500 கோடி மதிப்பு கொண்ட பிரம்மாண்ட சொகுசு இல்லத்தை பரிசாக வழங்கியிருக்கிறார் என்று வெளியாகி இருக்கும் செய்தி பலரையும் வியக்க வைத்துள்ளது.

வழக்கமாக நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கு சில நிறுவனங்களின் தலைவர்கள் பல லட்சங்களை போனசாகவும் கார் உள்ளிட்டவைகளை பரிசாகவும் அளிப்பதை அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், முகேஷ் அம்பானி இவ்வளவு பெரிய தொகைக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார் என்று வெளியாகியிருக்கும் தகவல் தான் பலரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு வலது கரம் என்று சொல்லப்படும் அந்த ஊழியர் பெயர் மனோஜ் மோடி ஆகும். மும்பையில் உள்ள நேபியன் சாலையில் உள்ள ஒரு இடத்தில் தான் இந்த பிரம்மாண்ட வீட்டை முகேஷ் அம்பானி வழங்கியிருக்கிறார். 22 மாடிகள் கொண்ட இந்த வீடு 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளதாக மேஜிக் பிரிக்ஸ். காம் செய்தி வெளியிட்டுள்ளது. மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம்.

மும்பையில் உள்ள பல்கலைக்கழகத்தில் வேதியியல் தொழில்நுட்பம் படிக்கும் போது இருவரும் ஒன்றாக படித்துள்ளனர். முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த போதே மனோஜ் மோடி அந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதாவது 1980 களில் பணிக்கு சேர்ந்துள்ளார். முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானிக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் மனோஜ் மோடிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானியுடனும் நல்ல நட்புறவு உள்ளதாம்.

நிறுவனத்தில் ஊழியர் என்பதை தாண்டி அம்பானி குடும்பத்திற்கு நெருக்கமானவராக இருப்பதால் முகேஷ் அம்பானி இப்படி பல கோடிகளில் வீட்டை பரிசாக கொடுத்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தகளுக்கு மூளையாக இருந்தது மனோஜ் மோடிதான். மனோஜ் மோடி தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+