முகேஷ் அம்பானியின் அன்டீலியா வீட்டில் ஏசியே இல்லை.. ஆனாலும் கோடையில் குளிர்ச்சியாக இருக்குமே!
மும்பை: மும்பையில் உள்ள இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் அன்டீலியா வீட்டில் ஏசி இல்லாவிட்டாலும் கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும்.
இந்திய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி நீடா அம்பானி, மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, மகள் ஈஷா அம்பானி ஆகியோராவர்.

இவர்களும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரர்களாகவும் வேறு சில நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்கள். முகேஷ் அம்பானிக்கு மும்பையில் 500 அடி உயரத்தில் ஒரு வீடு இருக்கிறது.
இதற்கு அன்டீலியா என்ற பெயர். இந்த வீட்டில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்கும் இங்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 மாடிகளை கொண்ட வீடாகும். இதில் முதல் 7 தளங்கள் வரை கார் பார்க்கிங். அம்பானி குடும்பத்தில் உள்ளவர்கள் புதிது புதிதாக கார்களை விரும்புவார்கள்.
அதனால் அதற்கு ஏற்ப கார்களை நிறுத்துமிடத்தையும் அமைத்துள்ளார்கள். இந்த வீடு உலகிலேயே மிகவும் விலை மதிப்பிள்ள வீடான அன்டீலியா ரூ 15 ஆயிரம் கோடி மதிப்புடையது. இதன் மொத்த பரப்பளவு 4 லட்சம் சதுர அடியாகும். இங்கு 168 கார் ரிப்பேர் செய்யும் கடைகள் உள்ளன. வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு ஒரு பெரிய ஹால் இருக்கிறது. 50 பேர் உட்கார்ந்து பார்க்கும் தியேட்டர், மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, மருத்துவமனை, கோயில் உள்ளிட்டவை இருக்கின்றன.
அது போல் இங்கு பனி அறை உள்ளது. இந்த அறையில் சுவற்றில் இருந்து பனி உருகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 அளவு நிலநடுக்கம் வந்தாலும் இந்த கட்டடம் உறுதித்தன்மையுடன் இருக்கும். உலகின் மிகவும் விலை மதிப்புள்ள கட்டடமாக இது கருதப்படுகிறது. இங்கு 9 அதிவேக லிப்ட்கள் உள்ளன.
இந்த வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் ஏசி மட்டும் இல்லவே இல்லை. பணக்காரர்களின் வீடு என்றாலே டாய்லெட்டில் கூட ஏசி இருக்கும். இது என்ன இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் வீட்டில் ஏசி இல்லையா. இப்போது அடிக்கும் வெயிலுக்கு ஒரு அறையில் ஒரு ஏசியே போதவில்லை. இதில் மும்பை போன்ற மாநகரங்களில் எப்படி அம்பானி குடும்பம் வெயிலை சமாளிக்கிறார்கள் தெரியுமா?

இந்தியாவிலேயே மிகவும் விலை மதிப்புள்ள வீடாக இருக்கும் போதிலும் ஏசி வசதி இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வீட்டில் வெளியே கன்டென்ஸர் எனப்படும் ஏசியின் அவுட்டோர் யூனிட் வைக்கப்பட வேண்டும். இது வீட்டின் அழகையே கெடுத்துவிடும். இதனால் அந்த கன்டென்ஸர் எனப்படும் அவுட்டோர் யூனிட்டை வைப்பதை அம்பானி விரும்பவில்லை.
அம்பானி வீட்டில் சென்டரலைஸ்டு ஏசி உள்ளது. இது குறிப்பிட்ட வெப்பநிலையில் இயங்கும். அன்டீலியாவின் சென்டரலைஸ்டு ஏசியின் வெப்பநிலையை மாற்றவே முடியாது. ஏனென்றால் வீட்டில் பதிக்கப்பட்டுள்ள மார்பிள்களுக்கு ஒரே மாதிரியான வெப்பநிலை தேவைப்படுகிறது. அம்பானியின் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் நல்ல காற்றோட்டமும் பால்கனியும் இருக்கும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications