லிவிங் டுகெதர்.. ஆறே மாசம் தான்.. கல்யாணம் செய்யாமல் வாழ்ந்த பெண்.. காதலனால் நடுங்க வைக்கும் சம்பவம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லிவ்-இன் ரிலேசன்ஷிப்பில் இருந்த பெண் செவிலியர், அவரது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லிவ்-இன் ரிலேசன்ஷிப்பில் இருந்த பெண் செவிலியர், அவரது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலியை கொன்ற இளைஞர், உடலை படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருக்கிறார். போலீசார் உடலை கண்டுபிடித்ததுடன் காதலனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் லிவ்-விங் டுகெதர் என்ற ரிலேசன்ஷிப் அதிகமாக உள்ளது. அதாவது திருமணம் செய்யாமல் கணவன் மனைவி போல் சேர்ந்து வாழ்கிறார்கள். அப்படி சேர்ந்து வாழும் அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் பிரிந்து சென்றுவிடுவார்கள். சில நேரங்களில் சண்டைகளால் கொலையும் நடக்கிறது. பாலியல் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் பெண்கள், வாழ்க்கையில் பின்னாளில் பெரும் சிக்கலையும் சந்திக்கிறார்கள்.
சரி விஷயத்திற்கு வருவோம். மும்பையில் லிவ்-இன் ரிலேசன்ஷிப்பில் இருந்த பெண் செவிலியர், அவரது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

வேலை இல்லை
மும்பை அருகே பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்திக், இவர் மேகா என்ற செவிலியருடன் (வயது 37) திருமணம் செய்யாமல் சேர்ந்த வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் மும்பை அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். வீட்டு செலவுகளை மேகா தான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஹர்திக் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனை அக்கம் பக்கத்தினர் உறுதி செய்துள்ளனர்.

உடல் மறைப்பு
இந்நிலையில் சம்பவத்தன்று ஹர்திக் மற்றும் மேகா இடையே வாய் தகராறு முற்றி உள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஹர்திக், மேகாவை தாக்கி கொலை செய்துள்ளார். அவரது உடலை என்ன செய்வது என்று யோசித்தவர், யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று நினைத்து, படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் எப்படியும் நம்மை போலீஸ் பிடித்துவிடும் என்று பயந்த ஹர்திக் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

கைது செய்தனர்
ஹர்திக் ஷா மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அதற்கு போலீசார் தகவல் அறிந்து ஹர்திக்கை கைது செய்ய வேண்டும் என அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தப்பி செல்ல முயன்ற ஹர்திக்கை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.
செவிலியர் மேகாவைக் கொன்ற பிறகு, ஹர்திக் சில வீட்டுப் பொருட்களை விற்றுவிட்டு பணத்துடன் தப்பி இருக்கிறார். அவர் ரயிலில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அவரது இருப்பிடத்தை கண்காணித்து, ரயில்வே போலீசார் உதவியுடன் கைது செய்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட ஹர்திக்கை கைது செய்ய குற்றப்பிரிவுக் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

காதலித்தனர்
இந்த கொலை பற்றி அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டினர் போலீசாரிடம் கூறுகையில், மூன்று வருடங்களாக காதலித்து வந்த ஹர்திக்கும், மேகாவும் கடந்த 6 மாதங்களாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இந்த வாடகை வீட்டில் குடியேறினர்.
ஹர்திக்கிற்கு வேலை இல்லை. மேகாவிற்கு ஹர்திக்கிற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்த சூழலில் கொலை நடந்திருக்கிறது என தெரிவித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications