உலகின் டாப் 8-ஆவது ரியல் எஸ்டேட் சந்தை மும்பை.. மளமளவென வளர்ந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மும்பை: உலக அளவில் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தைகளில் ஒன்றாக மும்பை உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் மும்பை 8-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 37-வது இடத்தில் இருந்த நிலையில், ஒரே ஆண்டில் 29 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளது. இந்தியாவின் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தைகளில் ஒன்றாக மும்பை உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் 8-வது இடத்தில் உள்ளது. நைட் பிரான்க் என்ற அமைப்பு The Wealth Report 2024 என்ற அறிக்கையை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

Mumbai among the Top 10 luxury real estate markets in world says Knight Frank Report

மும்பை எத்தனையாவது இடம்: இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 37-வது இடத்தில் மும்பை இருந்தது. ஆனால், ஒரே ஆண்டில் 29 இடங்கள் முன்னேறி 8-வது இடம் பெற்றுள்ளது. மும்பையில் சொத்துக்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் சொத்து மதிப்பு கிடு கிடுவென உயர்ந்தது ஆகியவையே இதற்கு காரணமாகும். மும்பையில் 1,108 சதுர அடி நிலம் வாங்க சுமார் 8.24 கோடி ரூபாய் தேவைப்படுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த லிஸ்டில் மொனோகா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனோகாவில் 172 சதுர அடி நிலம் வாங்குவதற்கே 1 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிட வேண்டுமாம். அதாவது இந்திய மதிப்பில் 8.27 கோடி ரூபாய் என்பதே இதன் மதிப்பு.. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் ஹாங்காங் உள்ளது. ஹாங்காங்கில் 236 சதுர அடி இடத்திற்கு 1 மில்லியன் டாலரை செலவிட வேண்டியிருக்கும்.

இந்தியாவின் ஐடி தலைநகரம்: இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இங்கு 344 சதுர அடி நிலம் தேவைப்படும். இந்த பட்டியலில் மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி 37-வது இடத்தில் உள்ளது. கடந்த 2022-ல் டெல்லி 77-வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 40 இடங்கள் முன்னேறி வருகிறது. இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர், இந்த பட்டியலில் 59-வது இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டு 63-வது இடத்தில் பெங்களூர் இருந்தது. ஒரே ஆண்டில் 2.2 சதவீதம் பெங்களூரில் நிலத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள பிற நகரங்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம். பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் 5-வது இடத்தில் உள்ளது. ஏதென்ஸ் நகரம் 6-வது இடம் வகிக்கிறது. 7-வது இடத்தில் இபிஷா தீவும், 9-வது இடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரமும் உள்ளது. அதேபோல் முஸ்டிக் நகரமும் 9-வது இடம் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+