மும்பை பாஜக தலைவர் மங்கல் பிரபாத் சொத்து மதிப்பு தெரியுமா.. பிரமாண பத்திரத்தை பார்த்தால் தலைசுற்றும்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகர பாஜக தலைவராக பதவி வகிப்பவர் மங்கல் பிரபாத் லோதா. இவரது சொத்து மதிப்பை கேட்டால் மயக்கம் வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.
பாஜக தலைவர் பதவியோடு, மும்பை மலபார் ஹில் தொகுதியிலிருந்து எம்எல்ஏ பதவியையும் வகித்து வருகிறார். தெற்கு மும்பையின் செல்வந்தர்கள் ஏரியாக்களில் மலபார் ஹில் தொகுதியும் ஒன்றாகும்.

கடந்த 1995ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை இதே தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக உள்ள இவர், இப்போது 6வது முறையாக போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது வேட்புமனுவை தாாக்கல் செய்தார். தனது பிரமாணப் பத்திரத்தில் 441 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
63 வயதாகும் மங்கல் பிரபாத் லோதா, நாட்டின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர். மங்கல் பிரபாத் அளித்த, பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கும் அவரது மனைவிக்கும் ரூ. 252 கோடி மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன.
அசையா சொத்துக்கள் மதிப்பு சுமார் ரூ. 189 கோடி. ரூ.14 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் கார் ஒன்று இவருக்கு உள்ளது. அவரது பிற முதலீடுகள் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் செய்யப்பட்டுள்ளன. லோதாவின் கடன் மதிப்பு ரூ. 283 கோடி.
இவரது குடும்பம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளது. தெற்கு மும்பையில் ஐந்து குடியிருப்புகள் மற்றும் ராஜஸ்தானில் ஒரு பிளாட் உள்ளது.
லோதா மற்றும் அவரது மனைவி இருவரும் மலபார் ஹில் பகுதியில் ஒரு வீடு வைத்திருக்கிறார்கள். தவிர, அவரது மனைவி தெற்கு மும்பையில் மற்றொரு பிளாட் மற்றும் வணிகச் சொத்தையும் வைத்திருக்கிறார். லோதா மீது ஐந்து கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபைக்கு, அக்டோபர் 21 ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications