கொரோனாவால் மும்பையில் காவலர் ஒருவர் உயிரிழப்பு... 96 போலீஸார் கொரோனாவால் பாதிப்பு
மும்பை: மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மும்பை வகோலா பகுதியை சேர்ந்த காவலர் சந்திரகாந்த் பெண்டுர்கர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிகழ்வு மாஹாராஷ்டிரா காவல்துறையினருக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 57 வயதே ஆன சந்திரகாந்த் பெண்டுர்கர் வகோலா காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தவர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 96 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 15 பேர் காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள். 81 பேர் காவலர்களாக இருப்பவர்கள். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா. அங்கு கொரோனா காற்றை விட வேகமாக பரவிவருவதால் அதனை தடுப்பதற்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதேபோல் டெல்லியில் 21 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்று களமாடும் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரையும் கொரோனா பதம் பார்க்க தொடங்கியுள்ளது. இதனால் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications