“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?
மும்பை: பிரேதப் பரிசோதனைக்கு வரும் சடலங்களை பார்க்கும்போது என்ன தோன்றும்? என்கிற கேள்விக்கு.. முதலில் அவர்களின் ஆணுறுப்பின் சைஸைதான் பார்ப்போம் என்று பெண் மருத்துவர் ஒருவர் பதிலளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மருத்துவர் வேலை சாதாரணமானது கிடையாது. உயிரை காப்பாற்றும் பொறுப்பை ஏற்று செயல்படும் மருத்துவர்கள், எந்நேரமும் பரபரப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களும் மனிதர்கள்தானே! எனவே கிடைக்கும் நேரங்களில் தங்களை ரிலாக்ஸ் செய்துக்கொள்வார்கள்.

இருப்பினும், சவக்கிடங்கில் ஆணுறுப்பின் சைஸை பார்த்து, சிரித்து பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர். மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் இதைத்தான் செய்திருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் பிரணித் மோரே, தனது நிகழ்ச்சிகளின் போது பார்வையாளர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டவர். சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியில், முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் அவர் பேசினார். அந்தப் பெண் ஒரு மருத்துவர். அவரிடம், "சவக்கிடங்கில் சடலங்களைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? அந்த சூழலை எப்படி கையாள்வீர்கள்? ரொம்பவும் டென்ஷனாக இருக்குமா?" என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த அந்த பெண் மருத்துவர், "நாங்கள் சடலங்களின் உடைகளை அகற்றிவிட்டுப் பார்க்கும்போது, முதலில் ஆண்களின் அந்தரங்க உறுப்பைத்தான் பார்ப்போம். அது பெரியதாக இருக்கிறதா அல்லது சிறியதாக இருக்கிறதா என்று பார்ப்போம்" என்று கூறி சிரித்திருக்கிறார். இதுதான் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே சோஷியல் மீடியாக்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
உயிரிழந்தவர் ஏதோ ஒரு குடும்பத்தில் மூத்தவராக இருக்கலாம், அரசு அதிகாரியாக இருக்கலாம், மாணவராக, பொறுப்புள்ள இளைஞனாக இருக்கலாம். அவர்களின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக நடந்துக்கொள்வதெல்லாம் என்ன நடைமுறை? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதே இடத்தில் ஒரு ஆண் மருத்துவர் இருந்து, பெண் சடலங்களைப் பற்றி இப்படிப் பேசியிருந்தால் இந்நேரம் அவர் வேலை இழந்திருப்பார் அல்லது சிறையில் இருந்திருப்பார். பெண் என்பதால் சலுகையா? என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
இப்படி பேசியதற்காக தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மருத்துவக் கவுன்சில் அந்தப் பெண்ணின் மருத்துவ உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர்.
மன்னிப்பு கேட்ட மருத்துவர்
மருத்துவர் பேசியது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் சூழல் காரணமாக, மேடை நகைச்சுவைக்காக எவ்வித உள்நோக்கமும் இன்றி, யோசிக்காமல் அந்த வார்த்தைகளைக் கூறிவிட்டதாக அந்த பெண் மருத்துவர் ஒப்புக்கொண்டார்.
மட்டுமல்லாது, தான் உண்மையில் பயோகெமிஸ்ட்ரி மருத்துவர் என்றும், சவக்கிடங்கு அல்லது உடற்கூறாய்வு பணிகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், நகைச்சுவைக்காக அப்படிப் பொய் சொன்னதாகவும் விளக்கமளித்தார். தனது பேச்சு ஒட்டுமொத்த மருத்துவத் துறைக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்திய காயத்திற்கு தான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், இனி பொதுவெளியில் கண்ணியத்துடன் நடந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications